மக்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் நன்றி… லால் சலாம் படக்குழு வெளியிட்ட போட்டோ!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் லால் சலாம். இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
கள்ளக்குறிச்சிக்கு அருகே உள்ள மூரார்பாத் என்ற ஊரில் இந்து மற்றும் இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அரசியலுக்காக அவர்களுக்குள் பிளவு ஏற்படுத்த அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். அதில் வெற்றியும் அடைகிறார்கள். இதனால் அந்த கிராமம் என்னானது? அதனால் யார் யாருக்கு இழப்பு ஏற்பட்டது? இறுதியில் ஊர் ஒன்று சேர்ந்ததா? என்பதுதான் லால் சலாம்.
இதில் விஷ்ணு விஷால் இந்து இளைஞர்களே கொண்ட கிரிக்கெட் அணியின் வீரராகவும், விக்ராந்த் இஸ்லாமிய இளைஞர்களை கொண்ட கிரிக்கெட் அணியின் வீரராகவும் வருகின்றனர். அதிலும் விக்ராந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரஜினியின் மகனாக நடித்துள்ளார். இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் பிரச்சனையை ஏற்படுத்தி ஊரைக் கலவரம் ஆக்கி விடுகின்றனர். ஒரு சிலரின் சுயநலத்துக்காக கலவர பூமியாக மாறிய முரார் பாத் அடுத்த அடுத்த பிரச்னைகள் திரைக்கதையாக விரிகிறது.
மதத்தின் பெயரால் சிலர் நம்மை பிரித்தால நினைத்தாலும், நாம் ஒன்றாக இருந்து அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற கருத்துடன் எடுக்கப்பட்டிருக்கும் இந்த லால் சலாம் படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் மக்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் நன்றி என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.