சுவிஸ் பொலிஸ் நிலையத்தில் இளம்பெண் மர்ம மரணம்: இது இரண்டாவது சம்பவம்…
சுவிஸ் பொலிஸ் நிலையம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நீதித்துறை அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
பொலிஸ் நிலையத்தில் இளம்பெண் மர்ம மரணம்
திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்ட 20 வயது இளம்பெண் ஒருவர், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள Boulevard Carl-Vogt என்னுமிடத்தில் பொலிஸ் நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தார்.
அவர் சுயநினைவின்றிக் கிடந்ததைக் கண்டதாக கூறியுள்ள பொலிசார், அவசர உதவியை அழைத்ததாகவும், ஆனால், அவர்களால் அவரைக் காப்பாற்றமுடியவில்லை என்றும் கூறியுள்ளார்கள்.
இந்த ஆண்டில், இதே பொலிஸ் நிலையத்தில் இப்படி காவலில் வைக்கப்பட்டவர் உயிரிழப்பது இது இரண்டாவது முறையாகும். இந்த சம்பவம் தொடர்பாக நீதித்துறை அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.