ஜேர்மனிக்கு அனுப்பப்பட இருந்த வாழைப்பழ பார்சல்களை சோதனையிட்ட பொலிசார்: காத்திருந்த அதிர்ச்சி…
ஜேர்மனிக்கு அனுப்பப்பட இருந்த வாழைப்பழங்கள் அடங்கிய கண்டெய்னர் ஒன்றை சோதனையிட்ட பிரித்தானிய பொலிசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
ஜேர்மனிக்கு அனுப்பப்பட இருந்த வாழைப்பழங்கள்
ஜேர்மனியிலுள்ள பிராங்பர்ட்டுக்கு அனுப்பப்படவேண்டிய கண்டெய்னர் ஒன்று, இங்கிலாந்தின் ஹாம்ப்ஷையர் துறைமுகத்தை வந்தடைந்தது.
அந்த கண்டெய்னரை பொலிசார் சோதனையிட்டார்கள். அப்போது அந்த கண்டெய்னருக்குள் இருந்த பார்சல்களில், வாழைப்பழங்களுக்கு அடியில் கொக்கைன் என்னும் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
5.7 டன் எடை கொண்ட அந்த போதைப்பொருளின் மதிப்பு 450 மில்லியன் பவுண்டுகள் ஆகும். அந்த பார்சல்களை அனுப்பியவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.
பிரித்தானியாவில் இதுவரை சிக்கியதிலேயே இதுதான் மிக அதிக அளவு போதைப்பொருள் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.