சத்தீஸ்கரில் ரூ.34,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

தேசிய அனல்மின் கழகத்தின் லாரா சூப்பர் அனல் மின் திட்டம் தொகுப்பு-1-ஐ பிரதமர் மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தேசிய அனல்மின் கழகத்தின் லாரா சூப்பர் அனல் மின் திட்டத்தின் தொகுப்பு-2-க்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

‘வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த சத்தீஸ்கர்’ நிகழ்ச்சியில் நாளை மதியம் 12:30 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.34,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார். சாலைகள், ரயில்வே, நிலக்கரி, மின்சாரம், சூரிய சக்தி உள்ளிட்ட பல முக்கிய துறைகளின் திட்டங்களாகும்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் தேசிய அனல் மின் கழகத்தின் லாரா சூப்பர் அனல் மின் திட்டம் தொகுப்பு-1 (2×800 மெகாவாட்) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் தேசிய அனல் மின் கழகத்தின் லாரா சூப்பர் அனல் மின் கழகத்தின் தொகுப்பு-2 (2×800 மெகாவாட்) திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

தொகுப்பு -1 சுமார் ரூ.15,800 கோடி முதலீட்டில் கட்டப்பட்டாலும், திட்டத்தின் தொகுப்பு -2 தொகுப்பு-1 வளாகத்தில் இருக்கக்கூடிய நிலத்தில் கட்டப்படும். இதனால் விரிவாக்கத்திற்கு கூடுதல் நிலம் தேவையில்லை. மேலும் ரூ.15,530 கோடி முதலீடு தேவைப்படுகிறது.

தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தின் ரூ.600 கோடிக்கும் அதிகமான மொத்த செலவில் கட்டப்பட்ட மூன்று இணைப்பு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

நிலக்கரியை விரைவாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், இயந்திரங்கள் மூலமாகவும் திறம்பட வெளிக்கொணர இவை உதவும். இந்த திட்டங்களில் தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தின் டிப்கா பகுதியில் நிலக்கரி ஆலையை கையாளுதல், தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தின் ராய்கர் பகுதியில் உள்ள சால் மற்றும் பரூட் நிலக்கரி ஆலை கையாளுதல் ஆகியவை அடங்கும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ராஜ்நந்த்கானில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சூரிய ஒளி மின் இயக்கத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டம் ஆண்டுதோறும் 243.53 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். 25 ஆண்டுகளில் சுமார் 4.87 மில்லியன் டன் கார்பன் உமிழ்வைக் குறைக்கும். இது அதே காலகட்டத்தில் சுமார் 8.86 மில்லியன் மரங்களால் ஏற்படும் கார்பன் உமிழ்வுக்கு சமம்.

இப்பகுதியில் ரயில் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், சுமார் ரூ.300 கோடி செலவில் கட்டப்படவுள்ள பிலாஸ்பூர் – உஸ்லாப்பூர் மேம்பாலத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது கட்னி நோக்கிச் செல்லும் பிலாஸ்பூரில் நிலக்கரி போக்குவரத்தால் ஏற்படும் நெரிசலை குறைக்கும். பிலாயில் 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி ஆலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

தேசிய நெடுஞ்சாலை 49-ல் 55.65 கிலோமீட்டர் நீளமுள்ள பிரிவை புனரமைப்பு, தரம் உயர்த்தும் பணிகளை இருவழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகளையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பிலாஸ்பூர், ராய்கர் ஆகிய இரு முக்கிய நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடர்பை மேம்படுத்த இந்தத் திட்டம் உதவும். தேசிய நெடுஞ்சாலை எண் 130-ல் 52.40 கிலோமீட்டர் நீளமுள்ள பிரிவை புனரமைத்து தரம் உயர்த்தும் பணிகளையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்தத் திட்டம் அம்பிகாபூர் நகரத்தை ராய்ப்பூர் மற்றும் கோர்பா நகரங்களுடன் இணைப்பதை மேம்படுத்தவும், இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *