சீனாவில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
சீன நகரமான சுஜோவில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் 100 க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்துக்குள்ளாகியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் பனி சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை
இந்த மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் இலட்சக்கணக்கான மக்கள் சந்திர புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணமுள்ளனர்.
இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி ஒரே இடத்தில் குவிந்து கிடந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.