முட்டைகோஸ் முதல் அவகேடோ வரை… உணவே மருந்து: குடும்பத்திலுள்ள அனைவருக்கும் சில பயனுள்ள தகவல்கள்
எளிதாக கிடைக்கும் முட்டைகோஸ் முதல் விலையுயர்ந்த அவகேடோ வரை, உணவே மருந்து என்று கூறும் வகையில் ஒவ்வொரு காய்கறியும், பழங்களும், குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் நன்மை பயக்கக்கூடியவையாக உள்ளன.
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லத் தேவையே இருக்காது என்பார்கள். ஆப்பிள் மட்டுமல்ல, விலை குறைவான பழங்களும், காய்களும் கூட பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன என்கிறார் உணவியல் நிபுணரான Thea Jacobs என்பவர்.
எலுமிச்சை
நண்பர் ஒருவர் புகழ்பெற்ற மருத்துவக்கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருக்கும்போது, அளவுக்கதிகமாக மேலைநாட்டுக் குளிர்பானம் ஒன்றைக் குடித்து சிறுநீரகக் கல் பிரச்சினையை வருத்திக்கொண்டார். அவர் அங்குள்ள மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்காக செல்ல, அனுபவம் மிகுதியால் ஆணவத்தில் உச்சத்தில் இருந்த அந்த மருத்துவர், நீ தினமும் ஒரு எலுமிச்சை உட்கொள்ளாவிட்டால் செத்துப்போய்விடுவாய் என முகத்துக்கு நேரே சொல்ல, அதிர்ச்சியில் உறைந்துபோனார் நண்பர்.
ஆனால், உண்மையிலேயே எலுமிச்சை சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும் தன்மை கொண்டவை என ஆய்வுகள் கூறுகின்றன. என்ன, அதை அந்த மருத்துவர் கொஞ்சம் கனிவாக சொல்லியிருக்கலாம்!
அவகேடோ
உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் அவகேடோவில், lutein மற்றும் zeaxanthin என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை, பார்வைத்திறனுக்கு பயனளிக்கக்கூட்யவையாகும்.
Blackcurrants
Blackcurrant பழங்களை, இயற்கையின் வயாகரா என அழைக்கலாம். இந்த பழங்களில் உள்ள flavonoids என்னும் பொருளுடன், உடற்பயிற்சியும் இணைந்தால், ஆண்களின் தாம்பத்ய வாழ்க்கையிலுள்ள பிரச்சினைகளைக் குறைக்கலாம்.
காலிஃபிளவர்
காலிஃபிளவர் வயதாவதை மெதுவாக்க உதவும் ஒரு காய்கறியாகும். அவற்றிலுள்ள sulforaphane என்னும் ரசாயனம், inflammation என்னும் பிரச்சினையைக் குறைக்க உதவுவதுடன், நச்சுப்பொருட்களை செயலிழக்கச் செய்து, டிஎன்ஏவையும் பாதுகாக்கும் திறன் கொண்டதாகும்.
பேரீச்சம்பழம்
பேரீச்சம்பழம், கர்ப்பம் மற்றும் பிரசவத்தை எளிதாக்கும். அதாவது, சுகப்பிரசவத்தை எளிதாக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பேரீச்சம்பழம் சாப்பிட்டால், பேரீச்சம்பழம் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடும்போது, இவர்களுக்கு விரைவாக குழந்தை பிறக்கும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
Elderberries
உங்களுக்கு தொண்டை வலி மற்றும் இருமல் இருக்கும் போது Elderberry பழங்களை சாப்பிடுவது நல்லது. அவை, நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் நேரத்தைக் குறைக்க உதவுவதுடன், காய்ச்சலுக்கு எதிராக பாதுகாக்கும் வகையில் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் திறனு கொண்டவையாகும்.
Fennel
Fennel, மெனோபாஸ் என்னும் மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளை எளிதாக்க உதவும். பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த Fennel அதனால் ஏற்படும் உடல் உபாதைகளைக் குறைக்க உதவும்.
திராட்சை
திராட்சைப்பழம், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம் அவற்றை எதிர்த்துப் போராட உதவும் என்று கருதப்படுகிறது . திராட்சையிலுள்ள anthocyanins என்னும் ரசாயனம், பாக்டீரியாவின் வெளிப்புறத்தோலை அழிக்கக்கூடியது என ஆய்வுகள் கூறுகின்றன.
Horseradish
Horseradish உடல் எடையைக் குறைக்க உதவும். இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், ஆரோக்கியமான உணவுக்கு ஒரு நல்ல துணையாக அமைகிறது.
Iceberg Lettuce
Iceberg lettuce இதயத்திற்கு மிகவும் நல்லது, அதில் பல வைட்டமின்கள் உள்ளன. இதிலுள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது, அதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.
பலாப்பழம்
பலாப்பழம், நன்றாக தூங்க உதவும் ஒரு உணவுப்பொருள் ஆகும். இதிலுள்ள மெக்னீசியமும் இரும்புச்சத்தும் நல்ல தூக்கம் வரவைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கிவி
யாருக்காவது ஆஸ்துமா இருந்தால், அவர்கள் கிவி பழத்தை எடுத்துக் கொள்ளலாம். அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி ஆஸ்துமாவின் அறிகுறிகளை நீக்க உதவலாம்.
Mustard Greens
Mustard greens என்னும் கீரை முகப்பருவைத் தடுக்க உதவுகிறது. அது மட்டுமின்றி, அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் பொதுவான தோல் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.
Nectarines
Nectarines என்னும் பழங்கள், கர்ப்ப காலத்தில் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க உதவும். இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு உதவுவதுடன், உயர் இரத்த அழுத்தம் முதலான பிரச்சினைகளுக்கும் நல்லது.
ஆலிவ் பழங்கள்
ஆலிவ் பழங்களில் எலும்பு வளர்ச்சிக்கு உதவக்குடிய oleuropein என்னும்பொருள் ஆலிவ் எண்ணெயை உட்கொள்பவர்களுக்கு அது ஆஸ்டியோபோரோசிஸ் எலும்பு முறிவு அபாயத்தை 51 சதவீதம் குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
Parsnips
Parsnip, நம்மை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதிலுள்ள falcarinol என்னும் ரசாயனம், மூளையில் serotonin என்ற வேதிப்பொருளை ஊக்குவிக்கும், இந்த ரசாயனம் நம்மை ரிலாக்ஸாக உணர வைக்கிறது
Quince
Quince மலச்சிக்கலுக்கு இயற்கை மருத்துவமாகும். அத்துடன், அது அஜீரணத்தைப் போக்கவும் உதவக்கூடியது.
Rhubarb
Rhubarb, காயங்களை திறம்பட குணப்படுத்த உதவும். இதிலுள்ள வைட்டமின் கே இரத்தம் உறைவதற்குத் தேவையானதாகும்.
Spinach
Spinach, வலுவான மற்றும் ஆரோக்கியமான நகங்களின் வளர்ச்சிக்கு உதவக்குடியதாகும். இதிலுள்ள பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி நகங்களின் நலனுக்கு உதவக்குடியவையாகும்.
தக்காளி
தக்காளிப்பழங்கள் ஆண்களின் இனப்பெருக்கத்திறனை அதிகரிக்க உதவும். ஒரு நாளைக்கு ஏழு அவுன்ஸ் தக்காளிச்சாறு உட்கொள்வது, உயிரணுக்களின் இயக்கத்தை அதிகரிப்பதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
Ugli Fruit
Ugli fruit என்னும் பழத்தில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது, இது ஆற்றலை அதிகரிக்கும். உங்களை விழிப்பாக வைத்திருக்கவும் உதவும்.
Vidalia Onions
Vidalia onions என்னும் வெங்காயத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால், அவை கால்சியத்தை உறிஞ்சுவதை ஊக்குவிக்க உதவுவதால், எலும்புகளை வலுவாக்க உதவும்.
Watercress
Watercress உடற்பயிற்சியின் போது இரத்த சிவப்பணுக்களில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதில் பங்கு வகிக்கிறது.
Yams
Yam என்னும் கிழங்குகள், இனபெருக்கத் திறனுக்கு உதவுவதுடன், அவர்றிலுள்ள் phytoestrogens எனும் ரசாயனம், ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தி கர்ப்ப காலத்தில் நன்மை பயக்கும். அத்துடன், அவை பெண்களின் கருமுட்டை உருவாகுதலை ஊக்குவிக்கக்கூடியவையுமாகும்.
Zucchini
Zucchini என்னும் காய், இனப்பெருக்கதிறனை அதிகரிக்க உதவுவதுடன், புரோஸ்டேட் சுரப்பி ஒழுங்காக வேலை செய்ய உதவுவதுடன், அதன் விதைகளிலிருந்து எடுக்கப்படும் சாறு, வயதான ஆண்களுக்கு சிறுநீர் மற்றும் பாலியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் புரோஸ்டேட்டின் வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும்.