சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்க இதை செய்தாலே போதும்- மருத்துவரின் கூற்று
சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும் கற்கள் சிறுநீரக கற்கள் ஆகும்.
மேலும் மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
அந்தவகையில், சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்க சில குறிப்புகளை மருத்துவர் டெய்சி தங்கையா பகிர்ந்துள்ளார்.
மருத்துவரின் கூற்று
குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
குளிர்ந்த உணவுகளை அல்லது குளிர்ந்த நீரை உண்பதை தவிர்க்கவும்.
நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்து வேலை பார்க்க கூடாது.
இரவு 7 மணிக்குள் இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும்.
துரித உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தினமும் தயிர் சாதம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
காய்கறி பழங்களை உன்ன வேண்டும்.
தினமும் 1 மணிநேரம் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா செய்ய வேண்டும்.
எண்ணெய் பலகாரங்களை சாப்பிட கூடாது.