வீட்டில் ஊதுபத்தி ஏற்றுங்கள்… எதிர்மறை சக்தியை விரட்டுங்கள்..!!
பொதுவாகவே, சிலர் தங்கள் வீட்டில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பூஜை செய்வார்கள். பூஜையின் போது, தெய்வத்திற்கு மலர்கள், கற்பூரம், ஊதுபத்திகள் மற்றும் பிரசாதம் வழங்குவார்கள். அந்த வரிசையில் ஊதுபத்தி, வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியை அகற்றி, பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்க ஊதுபத்தியால் முடியும் என்று உங்களுக்கு தெரியுமா..?
ஜோதிட சாஸ்திரப்படி, வீட்டில் ஊதுபத்தி ஏற்றுவது நேர்மறை சக்தியை உருவாக்குகிறது. இதனால் வீட்டுச் சூழல் இனிமையாக இருக்கும். நேர்மறை ஆற்றல் மேலோங்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
தினமும் வீட்டில் ஊதுபத்தி ஏற்றுவது வீட்டில் அமைதியான சூழலை உருவாக்குகிறது. வீட்டில் ஊதுபத்தி மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் சின்னமாக கூறப்படுகிறது. மேலும் இது மன அழுத்தத்தையும் குறைக்கும்.
அதேபோல் தினமும் வீட்டில் ஊதுபத்தி ஏற்றுவதால் வீட்டில் வாஸ்து தோஷங்கள் நீங்கி செல்வம் பெருகும் என்கின்றனர் ஜோதிடர்கள். அதுமட்டுமின்றி, தூபம் நுண்ணுயிரிகள், பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களைக் கொல்லும்.