மாசி மகம் 2024 : இன்று இதை செய்தால் போதும்… நீங்கள் நினைத்தது நிறைவேறும்..
ஒவ்வொரு மாதமும் மக நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றைய தினம் பௌர்ணமியும் சேர்ந்து வருவது தான் மாசி மகமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று மாசி மகம் விரதம் அனுசரிக்கப்படுகிறது. மாசி மகத்தில் புனித நீராடினால் நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.
மேலும் இதுபோன்ற சிறப்பு நாளில் நாம் எந்த வழிபாட்டை செய்தாலும் அதன் பலவிதமான பலன்களை பெற முடியும்.
குறிப்பாக முருகன் வழிபாடு, சிவன் வழிபாடு செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கும். மேலும் இன்றைய தினம் சத்ய நாராயணர் பூஜை செய்வது வெகு சிறப்பானதாக கருதப்படுகிறது. மேலும் இந்த பூஜைகளோடு இந்த ஒரு எளிய வழிபாட்டை செய்தால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
இந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். இன்றைய தினம் மாலை 6 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். அதற்கு மேல் பௌர்ணமி திதி முடிந்துவிடுகிறது. பௌர்ணமி திதியில் இந்த வழிபாட்டை செய்யும் போது அதிக பலனை பெறலாம்.
சத்திய நாராயணர் திருவுருவ படத்தை தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். பூஜை அறையில் இந்த சத்திய நாராயணம் படத்தை வைத்து அவர் முன்பு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். பின்னர் ஒரு தட்டில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, அதன் மேல் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி எடுத்து பரப்பி வைக்க வேண்டும். இப்போது இந்த பச்சரிசியில் உங்கள் வேண்டுதலை எழுத வேண்டும்.
பொதுவாக இறைவனிடம் உங்கள் வேண்டுதலை மனமுருகி சொன்னாலே நிச்சயம் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பார். ஆனால் இதுபோன்ற நாட்களில் அவர்களுக்கு உரிய முறையில் வழிபாடு செய்யும் போது அது விரைவில் நிறைவேறும் என்று சொல்வார்கள். அப்படி ஒரு வழிபாட்டு முறை தான் இந்த சத்தியநாராயணர் வழிபாடும்.
அதன்பின்னர் அந்த பச்சரிசியையும் நாணயத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வழிபாட்டை செய்த பிறகு 48 நாட்களுக்குள் உங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். எந்த ஒரு வழிபாட்டையும் நம்பிக்கையுடன் செய்தால் அதற்கான் பலன் நிச்சயம் கிடைக்கும். எனவே இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருந்தால், முழு நம்பிக்கையுடன் மனமுருக இறைவனை வேண்டி வழிபாடு செய்தால் நினைத்தது நிறைவேறும்.