உடனே டி ஆக்டிவேட் பண்ணுங்க.. பேடிஎம் பாஸ்ட் டாக்கை நீக்குவது எப்படி? என்ன செய்யணும்? பின்னணி

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இருந்து FASTags வாங்குமாறு மக்களை வலியுறுத்தும் வகையில் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதோடு அதிகாரபூர்வ பாஸ்ட் டாக் லிஸ்டில் இருந்து Paytm இன் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் Paytm FASTagக்கில் இருந்து எப்படி வெளியேறுவது என்று இங்கே பார்க்கலாம்.

NHAI மொத்தமாக 32 வங்கிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அங்கு பயணிகள் வாகனங்களுக்கு FASTags வாங்கலாம். இதில் இருந்து Paytm நீக்கப்பட்டு உள்ளது. Paytm FASTagsஐ பெற்றவர்கள் NH நெட்வொர்க்கில் தொந்தரவு இல்லாத பயணத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இருந்து புதிய FASTagsயை வாங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளன.

பணத்தை மாற்ற முடியாது: பேடிஎம் FASTagல் இருந்து வேறு வங்கியில் பெறப்பட்ட புதிய FASTagக்கு பேலன்ஸை நேரடியாக மாற்றுவது சாத்தியமில்லை. சிரமத்தைத் தவிர்ப்பதற்காக, கட்ஆஃப் தேதிக்கு முன், புதிய FASTagஐ முற்றிலும் வேறு வங்கியிலிருந்து வாங்க பயனர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதன் பொருள் உங்கள் FASTag Paytm ஐ வேறொரு வங்கிக்கு “போர்ட்” செய்ய முடியாது, ஆனால் Paytm உடன் ஏற்கனவே உள்ள FASTag ஐ மூடிவிட்டு வேறு நிறுவனத்தின் புதிய FASTag ஒன்றைப் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

Paytm FASTag கணக்கை செயலிழக்கச் செய்யும் வழிகள். Paytm FASTag ஐ முடக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

Paytm செயலியை திறக்கவும்

உங்கள் சுயவிவரத்திற்குச் செல்லவும்

help and support என்ற பக்கத்திற்கு செல்லவும்

‘வங்கி சேவைகள் மற்றும் கட்டணங்கள்’ என்பதன் கீழ் FASTag விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்

chat with us விருப்பத்தைப் பயன்படுத்தி செயலிழக்க கோரிக்கையை எழுப்பவும்

அதில் Paytm FASTag கணக்கை செயலிழக்கச் செய்யும் கோரிக்கையை வைக்கவும்.

என்ன நடந்தது?: பேடிஎம் மூலம் பலரும் பாஸ்ட் டாக் வாங்கி உள்ளனர். ஆனால் பேடிஎம் தற்போது ஆர்பிஐ மூலம் பிளாக் செய்யப்பட்டு உள்ளது. பிப்ரவரி 29 வரை மட்டுமே இதற்கு டைம். அதோடு இல்லாமல்.. பேடிஎம் யுபிஐ சேவையும் கூட செயல்படாமல் போகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பேடிஎம் மூலம் பலரும் பாஸ்ட் டாக் சேவையை பயன்படுத்தும் நபர்கள் அதன் வாலட் பணத்தை ரீபண்ட் பெற்றுவிட்டு.. புதிதாக பாஸ்ட் டாக் பெறுவது சரியாக இருக்கும்.

எப்படி அப்டேட் செய்வது?: இதற்காக FASTags எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.

வங்கியுடன் இணைக்கப்பட்ட FASTag இணையதளத்தைப் பார்வையிடவும். தேவையான பக்கத்தை அணுக, ‘FASTag’ என்ற சொல்லை கூகுள் செய்யலாம்.

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்

அங்கே உள்ள “எனது சுயவிவரம்” என்ற பகுதிக்குச் சென்று KYC தாவலைக் கிளிக் செய்யவும்

முகவரிச் சான்று மற்றும் மற்ற விவரங்கள் உள்ளிட்ட தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு அப்டேட் கொடுக்கவும்.

அந்த பகுதியில் நீங்கள் அப்டேட் செய்த KYC காட்டப்படும்.

உங்கள் FASTag நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?

நீங்கள் fastag.ihmcl.com என்ற பிரத்யேக இணையதளத்தில் இதை சோதனை செய்யலாம்:

இணையப் பக்கம் திறக்கும் போது,​​இணையதளத்தின் வலது மேற்புறத்தில் உள்ள உள்நுழைவை கிளிக் செய்ய வேண்டும்

உள்நுழைய OTP வரக்கூடிய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை வழங்க வேண்டும்

உள்நுழைந்த பிறகு, டாஷ்போர்டில் உள்ள சுயவிவரப் பகுதியைக் கிளிக் செய்யவும்

சுயவிவரப் பிரிவில், உங்கள் FASTag இன் KYC நிலை மற்றும் பதிவுச் செயல்பாட்டின் போது சமர்ப்பிக்கப்பட்ட சுயவிவர விவரங்கள் ஆகியவற்றைப் சோதனை செய்யலாம்

உங்கள் FASTag இணைக்கப்பட்ட வங்கியின் இணையதளத்திலும் இதைச் செய்யலாம்.

FAStag KYC ஐ முடிக்க தேவையான ஆவணங்கள்:

வாகனத்தின் பதிவு சான்றிதழ்

அடையாளச் சான்று

முகவரி ஆதாரம்

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் பான் கார்டு ஆகியவை அடையாள மற்றும் முகவரிச் சான்றாகப் பயன்படுத்தப்படலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *