2024 பஜாஜ் டாமினார் 400 பைக்கின் அறிமுக விபரம் வெளியானது
மேம்படுத்தப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கூடுதலாக சில மாற்றங்களை பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் டாமினார் 400 மற்றும் டாமினார் 250 பைக்குகள் விற்பனைக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.
டாமினார் 400 பைக்கில் தற்பொழுதுள்ள 373சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில், இதற்கு மாற்றாக புதிய டியூக் 390 மாடலில் இடம்பெற்றிருக்கின்ற 399சிசி என்ஜினை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. ஒரு சில மாடல்களில் மட்டுமே 373சிசி என்ஜின் பயன்படுத்தபட்டு வரும் நிலையில் படிப்படியாக இந்த என்ஜின் விடுவிக்கப்பட்டு வருகின்றது.
எனவே, புதிய டாமினார் 400 பைக்கில் அதிகபட்சமாக 44.25 bhp பவர் மற்றும் 39Nm டார்க்கை உற்பத்தி செய்கின்ற 399cc சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு ஆறு வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் கொண்டிருக்கும்.
ஏற்கனவே, இந்த மாடலில் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ரைட் கனெக்ட் ஆப் வசதியை இரண்டு டாமினர்களும் பெற உள்ளது. இந்த செயலி மூலம் இணைக்கும் பொழுது ப்ளூடூத் வாயிலாக ஸ்மார்ட்போனினை இணைத்தால் மொபைல் சிக்னல், எஸ்எம்எஸ் அலர்ட், அழைப்புகளை ஏற்க அல்லது நிராகரிக்கும் வசதி பெறக்கூடும். கியர் பொசிஷன் இன்டிகேட்டர், சராசரி மைலேஜ், ரைடிங்கை பொறுத்து தற்பொழுது மைலேஜ் எவ்வளவு கிடைக்கும் உள்ளிட்ட விவரங்களை பெற்றிக்கும்.
டாமினார் 250 மாடலில் 248.8 சிசி, திரவத்தினால் குளிரூட்டும் முறை பெற்ற ஒரு சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 27hp பவரை 8,500rpm-லும் 23.5Nm டார்க்கினை 6,500rpm-ல் வெளிப்படுத்துகின்றது.
தற்பொழுது விற்பனையில் உள்ள பஜாஜ் டோமினார் 400 மாடல் ரூ.2.30 லட்சத்தில் கிடைப்பதனால் விற்பனைக்கு வரவுள்ள மாடல் ரூ.7000 முதல் ரூ.10,000 வரை உயர்த்தப்பட்டு ரூ.2.40 லட்சத்துக்குள் வெளியிடப்படலாம்.