இந்தியாவில் வழங்கப்படும் நீல நிற ஆதார் அட்டை… இது யாருக்கு தெரியுமா ?
இந்தியாவில் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக கருதப்படுகிறது. இந்த ஆதார் அட்டையில் பயனர்களின் கைரேகை, பெயர், முகவரி, பிறந்த தேதி, அலைப்பேசி எண் மற்றும் UIDAI ஆல் வழங்கப்பட்ட 12 இலக்க அடையாள எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இத்தகைய ஆதார் அட்டையானது 2018 ஆம் ஆண்டு முதல் பிறந்த குழந்தைகளுக்கு UIDAI நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இது நீலநிற ஆதார் அட்டை அல்லது பால் ஆதார் என அழைக்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டையை குழந்தையின் 5 வயது வரை மட்டுமே பயன்படுத்த இயலும்.
இது குழந்தையின் பெற்றோர்களில் ஒருவரின் ஆதாருடன் இணைக்கப்படும். எனவே இந்த ஆதார் அட்டைக்கு குழந்தையின் பயோமெட்ரிக் அவசியமில்லை. குழந்தைக்கு 5 வயது நிரம்பியவுடன் பயோமெட்ரிக்கை இணைத்து புதிய ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க குழந்தையின் பிறப்பு சான்றிதழ், மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் சீட்டு அல்லது பள்ளியின் அடையாள அட்டையின் நகலை பயன்படுத்தலாம். இவ்வாறு பெறப்படும் ஆதார் அட்டையை பயன்படுத்தி குழந்தைகளுக்கான EWS உதவித்தொகையை பெறலாம் மற்றும் பள்ளிகளில் எளிதாக சேர்க்கலாம். இதை பெற விருப்பும் நபர்கள் https://uidai.gov.in/ என்ற இணைய தளத்திற்கு சென்று முதலில் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 60 நாட்களுக்குள் நீல நிற ஆதார் அட்டை:யானது வழங்கப்படும்.
இந்த நீல நிற அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா? ஆதார் ஆணையத்தின் (UIDAI) uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் நீல நிற ஆதாருக்கு விண்ணப்பிக்கும் படிவத்தில் விவரங்களை நிரப்பி பதிவு செய்வதற்கான அப்பாயிண்ட்மென்ட்டை தேர்வு செய்ய வேண்டும். பிறகு அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும். ஆதார் மையத்தில் பெற்றோரின் ஆதார், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வரும். அத்தாட்சி சீட்டை பெற மறந்துவிடாதீர்கள். 60 நாட்கள் கழித்து நீல நிற ஆதார் கார்டு உங்கள் குழந்தையின் பெயருக்கு வரும். இதற்கு பால ஆதார் கார்டு என்றும் பெயர். அந்த குழந்தைக்கு 5 வயது முடிந்தது அதனுடைய 10 விரல்கள், கண் கருவிழி, புகைப்படத்தை ஆதாரில் அப்டேட் செய்ய வேண்டும்.
அது போல் 5 வயது வரும் போதும் இதை மீண்டும் செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் 5 வயதுக்கு மேல் போனால் அந்த நீல நிற அடையாள அட்டை செல்லாது.