ஹனிடிராப் மோசடியில் சிக்கிய நந்தா பட நடிகர்..!
சென்னை, கோயம்புத்தூர், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஹேப்பி ஹோம்ஸ் என்ற பெயரில் முதியோர் இல்லத்தையும் இவர் நடத்தி வருபவர் டாக்டர் மதுசூதனன்.டாக்டராக இருந்தாலும் நடிப்பில் ஆர்வம் கொண்ட மதுசூதனன் தமிழ் மற்றும் மலையாளத்தில் துணை நடிகராக சில படங்களில் நடித்து இருக்கிறார். அத்துடன், நந்தா திரைப்படத்தில் நீதிபதியாக இவர் நடித்த காட்சிகள், மிகவும் பிரபலமானது.
இந்நிலையில் மருத்துவர் மதுசூதனன் சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார். காரில் சென்றபோது, இயற்கை உபாதைக்காக சாலை ஓரத்தில் நிறுத்த, அங்கு வந்த பெண் உட்பட நான்கு பேர் சேர்ந்து தன்னிடம் வழிப்பறி செய்ததாக புகாரில் தெரிவித்து இருக்கிறார்.கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்ததாக கூறப்பட்ட பெண்ணையும், அவரது நண்பரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சூழலில் வழிப்பறி செய்ததாக கைது செய்யப்பட்ட பெண்ணுடன், டாக்டர் மதுசூதனன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டாக்டரும், அந்த பெண்ணும் அறைகுறை ஆடையில் இருக்க, அங்கிருக்கும் இளைஞர்களிடம் மதுசூதனன் மன்னிப்பு கேட்பதுபோல ஒரு வீடியோ வெளியானது. அதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஹனிடிராப் மோசடியில் டாக்டர் மதுசூதனன் சிக்கியிருப்பது தெரியவந்தது.
பிரபல மருத்துவரும், நந்தா திரைப்படத்தில் நீதிபதியாக நடித்தவருமான மதுசூதனன், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை வீடியோ எடுத்து, அப்பெண் மதுசூதனனிடம் பல முறை பணம் பறித்தது மட்டுமல்லாமல், வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்