அடப்பாவிங்களா ? இப்படி கூட பிரச்சாரம் செய்வீங்களா ? அதுவும் ஆணுறை பாக்கெட்டில்..!
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடனே இணைந்து சட்டப்பேரவைக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் இந்த தேர்தல்களில் நேருக்கு நேர் மோதுகின்றன.ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுவதால் உச்சக்கட்ட பரபரப்பில் அந்த மாநில அரசியல் களம் இருக்கிறது.
இந்நிலையில், புதிதாக பிரச்சாரம் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸும், தெலுங்கு தேசம் கட்சியும் ஆணுறை பாக்கெட்டுகளில் தங்கள் கட்சிச் சின்னத்தையும், பெயரையும் பொறித்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.கட்சியின் பெயர் மற்றும் சின்னம் பொறித்த இந்த ஆணுறை பாக்கெட்டுகள் சமூக ஊடக வெளியிலும் வைரலாகி வருகின்றன.
ஆனால், இந்த செயல்பாடுகள் பொதுமக்களை முகம் சுளிக்கவே செய்திருக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக எந்த அளவுக்கு அரசியல் கட்சிகள் கீழே இறங்கியுள்ளன என ஆந்திரா மக்கள் பேசி வருகிறார்கள்.
தற்போது ஆணுறை பாக்கெடுகளை வழங்குகிறது’ எனவும், ’அடுத்தது என்ன… வயாக்ரா வழங்கப்போகிறார்களா’ என்ற கிண்டல் செய்வதையும் காண முடிகிறது