மக்கள் ஷாக்..! கேரளா மாநிலத்தில் இனி எளிமையாக ஓட்டுநர் உரிமம் பெற முடியாதாம்..!
இந்தியாவில் தற்போது விபத்து எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு முக்கிய காரணம் சாலை விதிகள் சரியாக கடைபிடிக்கப்படாதது தான். இந்நிலையில் ஒவ்வொரு மாநில அரசுகளும் சாலை விதிகளை கடுமையாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது கேரளா அரசும் புதிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அதாவது இனி எளிமையாக ஓட்டுநர் உரிமம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் ஓட்டுநர் உரிமம் பெற விதிமுறைகளை கேரளா அரசு கடுமையாக்கி உள்ளது. ஒரு நாளைக்கு 30 பேரை மட்டுமே சோதனைக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் ஆட்டோமேட்டிக் கார், மின்சார கார்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான கார்கள் சோதனைக்கு அனுமதி இல்லை எனவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.