வாவ்.. சூப்பர்…உலகின் மிகச்சிறிய வாஷிங் மெஷினை உருவாக்கி கின்னஸ் சாதனை..!
அண்மை காலங்களில் கின்னஸ் சாதனைகளை படைக்கும் சிலர், அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், டென்மார்க்கை சேர்ந்த பீட்டர் வான் டாங்கன் புஸ்கோவ் வித்தியாசமான முறையில் அனைவரையும் வியக்க வைக்கும் முறையில் ஒரு சாதனை படைத்துள்ளார். 39 வயதான அவர் தனது மூக்கு துவாரத்திற்குள் 68 தீக்குச்சிகளை திணித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் நபர் இவர் ஆவார்.
இதையடுத்து, அமெரிக்காவின் வாஷிங்டனை சேர்ந்த சோபியா ஹைடன் என்ற சிறுமி ஒரே நேரத்தில் 45 ஜெர்சிகளை அணிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவ்வாறு, பல கின்னஸ் சாதனைகள் வியக்கவைக்கும் முறையில் படைத்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சாய் திருமலாநீதி என்பவர் உலகின் மிகச்சிறிய வாஷிங் மெஷினை உருவாக்கியுள்ளார். இந்த வாஷிங் மெஷின் நீளம் 1.45 இன்ச் , அகலம் 1.61 இன்ச் மற்றும் உயரம் 1.69 இன்ச் ஆகும். சாய் திருமலாநீதி சிறிய சிறிய பொருட்களை பயன்படுத்தி இந்த வாஷிங் மெஷினைத் தயாரித்துள்ளார். தற்போது இந்த வாஷிங் மெஷின் கின்னஸ் சாதனை படைப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த மிக சிறிய படைப்பு அனைவரிடமும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த உலகின் மிகச்சிறிய வாஷிங் மெஷினை உருவாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.