நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் காவல்துறையில் புகார்..!
பயில்வான் ரங்கநாதன் மற்றும் பல யூடியூப் சானல்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் புகார் அளித்துள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அவர் அளித்துள்ள புகார் மனுவில், ‘என்னைப் பற்றியும் நடிகை திரிஷா பற்றியும் உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்தக்களை பலரும் பரப்பி வருகின்றனர். எந்த ஆதாரமும் இன்றி பரப்பிவரும் பொய்யான தகவலால் என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ளார்கள்.
இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். இந்த நபர்கள் மீதும் பல யூடியூப் சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, வீடியோ பதிவினை நீக்க உத்தரவு பிறபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.