கோதுமை மாவு இருந்தால் போதும்… 10 நிமிடத்தில் இனிப்பு அப்பம் ரெடி!
இனிப்பு பலகாரங்கள் என்றால் யாருக்குத்தான் சாப்பிட பிடிக்காது. அதுவும் மாலையில் பள்ளி விட்டு வரும் குழந்தைகள் தினமும் ஏதாவது ஒரு ஈவினிங் ஸ்னாக்ஸ் கேட்பார்கள். நீங்களும் தினமும் என்ன செய்யலாம் என்று மண்டையை பிய்த்துக்கொள்வீர்கள்.
அவர்களுக்காகத்தான் இந்த கோதுமை அப்பம் ரெசிபி. வீட்டில் கோதுமை மாவு இருந்தால் மட்டும் போதும் இந்த அப்பத்தை 10 நிமிடங்களில் செய்து அசத்திவிடலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 1 1/2 கப்
வெல்லம் – 1 கப்
துருவிய தேங்காய் – 1/2 கப்
ஏலக்காய் போடி – 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 2 சிட்டிகை
நெய் அல்லது எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – 2 பின்ச்
தண்ணீர் – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் ஒரு கப் அளவிற்கு இடித்த வெல்லம் மற்றும் முக்கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.
வெல்லம் கறையும்படி நன்றாக கிளறி விட்டு அது கொதித்ததும் அடுப்பை அனைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் இரண்டு பின்ச் உப்பு சேர்த்து நன்கு கலந்துவிட்டு கொள்ளுங்கள்.
பிறகு அதில் கரைத்து வைத்துள்ள சூடான வெல்ல தண்ணீரை வடிகட்டி அதில் ஊற்றி நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
அதனுடன் தோசை மாவு பதத்திற்கு வர தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்துகொள்ளவும்.
பின்னர் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் போடி சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
பிறகு அதில் இரண்டு சிட்டிகை பேக்கிங் சோடாவையும் சேர்த்து கலந்துவிட்டு கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் பணியார கல்லை வைத்து சூடானதும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நெய் அல்லது எண்ணெய் சேர்த்து அதில் கலந்து வைத்துள்ள மாவை கொண்டு பணியாரம் ஊற்றுவது போல் ஊற்றி கொள்ளவும்.
தற்போது பணியார கல்லை மூடி மிதமான தீயில் வேகவிடவும்.
மூன்று நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து எல்லா அப்பத்தை மறுபுறம் திருப்பி வேகவிடவும்.
அனைத்தும் முழுமையாக வெந்து பொன்னிறமாக மாறியவுடன் எடுத்து அனைவருக்கும் சூடாக பரிமாறுங்கள்…
குறிப்பு : உங்களுக்கு வேண்டுமென்றால் கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த மாவை அப்பம் போல் போட்டு பொரித்து எடுத்து பரிமாறலாம்.