கமல், பிரபாஸ் படத்தின் டீஸர்… வெளியான சூப்பர் அப்டேட்!

கமல் நடிப்பில் இந்தியன் 2, இந்தியன் 3, தக் லைஃப் படங்கள் வெளியாக உள்ளன. 2025 ல் சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார். இந்தப் படங்களுக்கு முன்பாக வரும் மே 9 ம் தேதி கமல் பிரபாஸுடன் நடித்திருக்கும் கல்கி 2898 AD திரைப்படம் வெளியாகிறது.

வைஜெயந்தி மூவிஸ் தங்களின் 50 வருட நிறைவை கொண்டாடும்விதமாக மெகா புராஜெக்ட் ஒன்றை பிரபாஸ் நடிப்பில் 2020 ல் அறிவித்தது. சயின்ஸ் பிக்ஷனும், இந்து புராண நம்பிக்கையும் கலந்து, வருங்காலத்தில் நிகழ்வது போல் இதன் கதை எழுதப்பட்டுள்ளது. 600 கோடி பட்ஜெட்டில், நாக் அஸ்வின் இயக்கத்தில் இப்படம் தெலுங்கு, இந்தியில் தயாராகும் என்று அறிவித்தனர். படத்துக்கு கல்கி 2898 AD என பெயர் வைக்கப்பட்டது.

கோவிட் பெருந்தொற்று காரணமாக பட அறிவிப்புக்குப் பின் படம் கிடப்பில் போடப்பட்டு, 2021 ல் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் வில்லனாக கமல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் தவிர அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி என முன்னணி நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து, 2021 ஜுலை முதல் படப்பிடிப்பை நடத்தினர்.

தற்போது இதன் மொத்த படப்பிடிப்பும் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. மே 9 படம் உலக அளவில் வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் முதல் டீஸரை தயார் செய்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் தயாராகியிருக்கும் இந்த டீஸரின் ரன்னிங் டைம் 1 நிமிடம் 23 வினாடிகள் என தெரிய வந்துள்ளது.

சுமார் 600 கோடிகள் பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் இப்படம், அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்திய திரைப்படமாக கருதப்படுகிறது. விரைவில் இதன் டீஸர் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *