இந்தியாவில் வெளியான ஜாவா 350 ப்ளூ கலர்… சிறப்பம்சங்கள் என்ன..?
குறிப்பிடத்தக்க சில அப்டேட்ஸ்களுடன் சமீபத்தில் 2024 ஜாவா 350 ரெட்ரோ மோட்டார் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் Jawa Yezdi நிறுவனம் தனது 2024 Jawa 350 மாடலில் புதிய கலர் ஆப்ஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள்ஸ் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற மஹிந்திரா ப்ளூஸ் நிகழ்வில் ஜாவா 350 ப்ளூ-வை (Jawa 350 Blue) காட்சிப்படுத்தியது. இந்த புதிய கலர் ஜாவா 350 விரைவில் ஷோரூம்களில் விற்பனைக்கு வர இருப்பதையும் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஜாவா 350 பைக்கானது தற்போது மெரூன், பிளாக் மற்றும் மிஸ்டிக் ஆரஞ்சு ஆகிய 3 கலர்களில் கிடைக்கிறது.
இந்த புதிய Jawa 350 Blue-ஆனது ஃப்யூயல் டேங்கில் டிரிபிள்-டோன் ஃபினிஷ் மற்றும் பக்கவாட்டில் குரோம் டீடெயிலிங் மற்றும் மையத்தில் ப்ளூ ஃபினிஷை கொண்டுள்ளது. ஃப்யூயல் டேங்க் மற்றும் சைட் பேனல்களில் உள்ள கோல்டன் பின்ஸ்ட்ரிப்ஸ் ரெட்ரோ ஸ்டைலை கூட்டுகிறது. 2024 ஜாவா 350 பைக்கானது அகலமான டயர்கள், நீண்ட வீல்பேஸ், 178 மிமீ ஹையர் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் கூடுதல் வசதிக்காக மேம்படுத்தப்பட்ட ரைடர் ட்ரையாங்கிள், சீட் ஹைட் அதிகரிப்பு மற்றும் ஃப்யூயல் டேங்க் கெப்பாசிட்டி குறைப்பு ஆகியவற்றுடன் ஃபிட் & ஃபினிஷ் ஆகியவற்றில் பெரிய அப்டேட்ஸ்களை கண்டுள்ளது.
ஜாவா 350-ன் எடை இப்போது 194 கிலோவாக உள்ளது, அதே நேரத்தில் சீட்டின் உயரம் முந்தைய 765 மிமீ-லிருந்து 790 மிமீ-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஃப்யூயல் டேங்க் கெப்பாசிட்டியானது 14 லிட்டரில் இருந்து 13.4 லிட்டராக குறைந்துள்ளது. மேலும் முக்கியமான மற்றும் பெரிய அப்டேட்டாக ஜாவா 350 பைக்கில் 293சிசி யூனிட்டிற்கு பதில் புதிய 334 சிசி லிக்விட்-கூல்ட், சிங்கிள் சிலிண்டர் மோட்டார் உள்ளது. இந்த மோட்டார் 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோட்டார் இப்போது பழைய எஞ்சினை விட குறைவான பவரை உருவாக்கினாலும், பீக் டார்க் அதிகமாக உள்ளது. இதன் பவர் 21.8 bhp-ஆகவும், பீக் டார்க் 28.2 Nm-ஆகவும் உள்ளது.
இந்த பைக்கில் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச், இரு பக்கங்களிலும் டிஸ்க் பிரேக்ஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. ஜாவா 350 பைக்கானது ரூ.2.14 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஹோண்டா CB350, Harley-Davidson X440 மற்றும் Benelli Imperiale 400 போன்ற பைக்குகளுடன் இது போட்டியிடுகிறது. இது தவிர, பைக் ரவுண்ட்-ஷேப்ட் ஹெட்லைட் செட்டப், இருபுறமும் USD ஃபோர்க்ஸ்களில் ரிஃப்ளக்டர்ஸ் , குரோம் ஃபினிஷ் ஸ்போக் வீல்ஸ் மற்றும் பின்புறத்தில் ஷாக் அப்சர்வர்ஸ் உள்ளிட்டவற்றை பெறுகிறது.