வோடபோன் ஐடியா: எதிர்பாராத பங்கு முதலீட்டு லாபம், இன்ப அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!
வோடபோன் ஐடியா பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 11 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. இந்திய டெலிகாம் சந்தையில் தொடர்ந்து வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் இழந்து வரும் VI பங்குகளின் திடீர் உயர்வுக்கு என்ன காரணம்..?
வோடபோன் ஐடியா நிறுவனம் நிதி திரட்டல் குறித்துப் பரிசீலிக்க அதன் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று அறிவிப்பு வெளியான பின்பு இந்நிறுவன பங்குகள் 11.24 சதவீதம் உயர்ந்து ரூ.18.11 என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது
வோடபோன் ஐடியா அதன் வாடிக்கையாளர் இழப்பைக் கட்டுப்படுத்த பெரும் முதலீடு தேவை. வோடபோன் ஐடியா, டிசம்பரில் 1.4 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்த வேளையில், நவம்பர் 2023 இல் 1.1 மில்லியன் இழப்பை ஒப்பிடுகையில் பெரிய அளவில் அதிகரித்தது என எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிதி திரட்டுதல் தொடர்பான திட்டத்தைப் பரிசீலித்து ஒப்புதல் அளிப்பதற்காகப் பிப்ரவரி 27 அன்று வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது.
வோடபோன் ஐடியா இயக்குநர்கள் குழு இந்த முதலீட்டை திரட்ட அனைத்து விதமான வழிகளையும் ஆராய உள்ளதாக தெரிகிறது. வோடபோன் ஐடியா நிறுவனம் கடுமையான கடன் சுமையில் உள்ளது மற்றும் அதன் சேவைகளும் சமீபத்தில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் கடந்த சில ஆண்டுகளில் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றம் நடந்துள்ளது. ஆம் 1 பில்லியன் டாலர் அதாவது 8000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தை மதிப்பு கொண்ட பங்குகளின் எண்ணிக்கை 2019 முதல் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 500 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளையில் 50 பில்லியன் டாலர்களுக்கு மேல் சந்தை மூலதனம் கொண்ட பங்குகள் குறைவாகவே உள்ளது. ஆனால் பெரும்பாலான லார்ஜ்கேப் நிறுவனங்கள் தனியார் உடைமையில் உள்ளன மற்றும் சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன என்று வெளிநாட்டுப் பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான Jefferies தெரிவித்துள்ளது.
இதேபோல் 5 / 10 / 15 / 20 ஆண்டு காலகட்டத்தில், சர்வதேச அளவில் முக்கிய வளரும் சந்தை (EM) பொருளாதாரங்களில், தொடர்ச்சியாக 10 சதவீதத்திற்கு அதிகமான வருடாந்திர வருமானத்தை வழங்கிய ஒரே பங்குச் சந்தை இந்திய பங்குச் சந்தைகள் தான் எனவும் Jefferies தெரிவித்துள்ளது.