7th pay commission: தேர்தலுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு இதை செய்திடனும்.. மோடியின் முடிவு!
இந்தியாவின் ஆட்சி அடுத்த 5 வருடம் யாருடைய கையில் இருக்கப்போகிறது என்பதை தீர்மானிக்கும் பொதுத்தேர்தல் இன்னும் 2 மாதத்தில் நடக்க உள்ள வேளையில், மக்களை கவர பல அறிவிப்புகள் வெலியாகும் என எதிர்பார்க்கக்ப்படுகிறது.
இந்த நிலையில் 7th pay commission அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance – DA) 4% அளவுக்கு மார்ச் மாதத்தில் உயர்த்தப்படவுள்ளது என தகவல வெளியாகியுள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு, அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் (Dearness Relief – DR) ஆகியவை 50 சதவீதத்தை தாண்டிச் செல்லும்.
கடந்த சில வாரங்களாக பல மாநில அரசுகள் அகவிலைப்படியை மாநில அரசு அதிகாரிகளுக்கு அதிகரித்து வரும் வேளையில், தேர்தலுக்கு முன்பு மத்திய அரசின் அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிகறது.
மத்திய அரசு, தொழிலாளர்களுக்கான நுகர்விலை குறியீட்டு (Consumer Price Index – CPI) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அகவிலைப்படி உயர்வு அளவை நிர்ணயிக்கிறது. தற்போது, 12 மாதங்களுக்கான சராசரி CPI 392.83 ஆக உள்ளது. இதன் அடிப்படையில், அடிப்படை ஊதியத்தில் 50.26 சதவீதம் அகவிலைப்படியாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் அலுவலகம் (Labour Bureau) ஒவ்வொரு மாதமும் நுகர்விலை குறியீட்டு (CPI-IW) தரவுகளை வெளியிடுகிறது. இதன் அடிப்படையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான மற்றும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி வழங்கப்படகிறது.
அகவிலைப்படி என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கானது, அகவிலைப்படி நிவாரணம் என்பது மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கானது. ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இரண்டு முறை அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆகியவை உயர்த்தப்படுகின்றன.
கடைசியாக அகவிலைப்படி உயர்வு 2023 அக்டோபர் மாதத்தில் வழங்கப்பட்டது. அப்போது, அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 46 சதவீதமாக மாற்றப்பட்டது. தற்போதைய பணவீக்க விலைவாசி நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த அகவிலைப்படி உயர்வு 4 சதவீதமாக இருக்கக்கூடும்.
இந்த நிலையில் அடுத்த அகவிலைப்படி உயர்வுகள் 2024 ஜனவரி 1 முதல் பின்னேற்பாடாகக் (Retrospective effect) செயல்படுத்தப்படும். எனவே, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கும் கடந்த மாதங்களுக்கான நிலுவைத் தொகையுடேன் சேர்ந்து மார்ச் மாத சம்பளத்தில் கிடைக்கும்.
அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கான பயன்படுத்தப்படும் பார்மூலா இதுதான். 7வது ஊதியக் குழு அகவிலைப்படி சதவீதம் = [{கடந்த 12 மாதங்களுக்கான நுகர்விலை குறியீட்டு சராசி (அடிப்படை ஆண்டு 2001=100) – 261.42} / 261.42 x 100]
இந்தக் கணக்கீட்டு வாய்பாடு, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்குப் பொருந்தும் என்பதைக் கவனிக்க வேண்டும்.