வைரத்தில் தாலி போட்ட இந்தியன் 2 ஹீரோயின்.. வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தவர்களுக்கு செம பரிசு!

மும்பை: கடந்த 21ம் தேதி நடிகை ரகுல் ப்ரீத் சிங் கோவாவில் கோலாகலமாக தனது திருமணத்தை நடத்தி முடித்த நிலையில், மும்பைக்கு நேற்று திரும்பினார். அப்போது புகைப்படக் கலைஞர்கள் புதுமண தம்பதியினரை வளைச்சு வளைச்சு போட்டோக்களை எடுத்து தள்ளினர். வழக்கமாக மும்பையில் பாப்பராஸி என சொல்லப்படும் புகைப்படக் கலைஞரின் தொல்லை பிரபலங்கள் எங்கே சென்றாலும் இருக்கத்தான் செய்யும்.
ஆனால், அவர்கள் மூலமாகத்தான் இவர்கள் பிரபலம் ஆகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை மறக்காத அயலான் ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங் அவர்களை சந்தித்த போது ஆளுக்கொரு ஸ்வீட் பாக்ஸ் பரிசாக வழங்கி அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
தயாரிப்பாளருடன் திருமணம்: நடிகை ரகுல் ப்ரீத் சிங் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி என்பவரை கடந்த பிப்ரவரி 21ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார். கோவாவில் நடைபெற்ற ரகுல் ப்ரீத் சிங்கின் திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் குறிப்பிட்ட நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பட்டாசு எல்லாம் வெடிக்காமல், பசுமை வழி திருமணமாக ரகுல் ப்ரீத் சிங் திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. அக்ஷய் குமார் நடித்த பல படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் தான் ஜாக்கி பக்னானி என்பது குறிப்பிடத்தக்கது. பெல் பாட்டம், கட் புட்லி விரைவில் ரிலீஸ் ஆக உள்ள படே மியான் சோட்டே மியான் உள்ளிட்ட பல படங்களை ஜாக்கி தயாரித்துள்ளார்.
டிரெண்டாகும் திருமண பிக்ஸ்: பேஸ்டல் நிற ஆடைகளை தான் சமீப காலமாக பாலிவுட் பிரபலங்கள் தங்கள் திருமணத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். ரகுல் ப்ரீத் சிங்கும் பிங்க் கோல்ட் பேஸ்டல் நிற திருமண புகைப்படங்களை வெளியிட்டு இந்தியளவில் டிரெண்டாக்கி விட்டார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் இந்தியன் 2 ஹீரோயினை வாழ்த்தி வருகின்றனர்.
வைரத்தில் தாலி: பொதுவாக திருமணத்தில் தங்கத்தில் தாலி போட்டு பார்த்திருப்போம். அதிலும், புதுமையை செய்ய வேண்டும் என நினைத்த ரகுல் ப்ரீத் சிங் வைரத்தில் தாலியை அணிந்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இந்திய ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
ஹனிமூன் இப்போ இல்லை: அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகி உள்ள படே மியான் சோட்டே மியான் படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் ரிலீஸுக்கு பின் தான் ஹனிமூன் என்கிற பேச்சுக்கே இடம் என ஜாக்கி பக்னானி ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.