ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போரில் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னியின் மறைவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவின் பொருளாதாரம், தொழில் துறையை பாதிக்கும் வகையில் பல புதிய தடைகள் விதிக்கப்படும் என்று ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர்
இந்த நிலையில் உக்ரைன் போர்-நவால்னி மரணம் விவகாரத்தில் ரஷ்யாவை சேர்ந்த நிறுவனங்கள் தனி நபர்கள் உள்பட 500 இலக்குகள் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறும் போது, நாவல்னியின் சிறை வாசத்துடன் தொடர்புடைய நபர்கள்,ரஷ்யாவின் நிதித் துறை, பாதுகாப்பு, தொழில் துறை, உள்ளிட்டவை மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் போருக்கு ஆதரவாக உள்ள 100 நிறுவனங்களுக்கு புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கிறோம் என கூறியுள்ளார்.