அலெக்ஸி நவல்னியின் தாயாரின் பிடிவாதம்… இறுதியில் பணிந்த ரஷ்ய ஜனாதிபதி புடின்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியின் சடலம் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவல்னியின் உடலை அவரது தாயாரிடம்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியின் உடலை ரகசியமாக அடக்கம் செய்ய வேண்டும் என்று விளாடிமிர் புடின் நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாகவும், மறுத்தால் நவல்னி இறந்த சிறை காலனியில் அவர் அடக்கம் செய்யப்படுவார் என மிரட்டப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் அலெக்ஸி நவல்னியின் உடலை அவரது தாயாரிடம் ஒப்படைத்துள்ளதாக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது உடலை மீட்டுத் தருமாறு கோரிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இறுதிச்சடங்குகள் தொடர்பில் மிக விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், நவல்னியின் இறுதிச்சடங்களின் போதும் அதிகாரிகள் தலையிடுவார்களா என்பது தொடர்பில் தெரியவில்லை என்றும் செய்தித்தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நவல்னி இறந்ததாக தகவல் வெளியான பின்னர், கடந்த ஒரு வாரமாக அவரது தாயார் மகனின் உடலை மீட்க போராடி வருகிறார். நவல்னி இயற்கையாக மரணமடைந்துள்ளதாக இறப்பு சான்றிதழலில் குறிப்பிட்டு ஒப்பிட கட்டாயப்படுத்தப்பட்டதுடன்,
ரகசியமாக இறுதிச்சடங்குகளை முன்னெடுக்கும்படி 3 மணி நேர அவகாசம் அளித்து ஒப்புக்கொள்ளவும் மிரட்டியுள்ளனர். ஆனால் புடின் நிர்வாகத்தின் மிரட்டலுக்கு அவர் பணிய மறுத்துள்ளார்.
நவல்னியை கொல்ல ரஷ்ய உளவுத்துறை
இந்த நிலையில், நவல்னியின் உடலை அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 16ம் திகதி ஆர்க்டிக் வட்டத்திற்குள் உள்ள ரஷ்ய சிறையில் நவல்னி திடீரென்று இறந்தார்.
கடந்த பல ஆண்டுகளாக புடின் நிர்வாகத்தையும் புடினையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அலெக்ஸி நவல்னி. 2020 ஆகஸ்டு மாதம் Novichok என்ற ரசாகயனத்தை பயன்படுத்தி நவல்னியை கொல்ல ரஷ்ய உளவுத்துறை முயன்றது.
இதில் மிக ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட நவல்னி, ஜேர்மனிக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைக்கு பின்னர் 2021 ஜனவரியில் நாடு திரும்பிய அவரை ரஷ்ய நிர்வாகம் கைது செய்ததுடன், அவர் தற்போது சிறையிலேயே மரணமடைந்துள்ளதாகவும் ரஷ்ய நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.