நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா?- வைரலாகும் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சிம்ரன், தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த நேருக்கு நேர் படத்தில் தான் முதலில் நடித்தார்.
அதன் பிறகு இவர் பல பிரபல ஹீரோக்களுக்கு ஜோடி சேர்ந்து படங்களில் நடித்து விட்டார்.
2009ஆம் ஆண்டிற்கு பிறகு படத்தில் நடிக்க இடைவெளி எடுத்த இவர் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் கம் பேக் கொடுத்தார்.
மேலும் இவர் வித்யாசமான கேரக்டரில் சீமராஜா படத்தில் சமந்தாவிற்கு வில்லி-சித்தியாக நடித்தார்.
சிம்ரன், 2003ஆம் ஆண்டு சிறு வயது நண்பரான தீபக் பகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
அதில், மூத்த மகன் பெயர் அதீப் பாகா. இவர், 2005ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு தற்போது 18 வயதாகிறது. இரண்டாவது மகன் பெயர், ஆதித்.
இவர்தான் சிம்ரனின் மூத்த மகன் அதீப் பகாவின். இவரது புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.