எந்த சூழ்நிலையிலும் கெத்து காட்டும் ராசியினர் இவர்கள் தான்… யார் யார்னு தெரியுமா?

பொதுவாகவே அனைவருக்கும் மன உறுதியும் தன்னம்பிக்கையும் இருக்கும். ஆனால் ஒரு சிலர் சற்று அசாதாரணமாக எந்த சூழ்நிலைக்கும் அஞ்சாதவர்களாகவும் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களுக்கு எல்லோருக்கும் இருப்பது போல் பயம், பதட்டம் என அனைத்தும் இருந்தாலும், அதை கட்டுக்குள் வைத்துக்கொள்வதில் இவர்கள் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு எந்த கடினமான சூழலை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரியும். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பாரர்க்கலாம்.

12 ராசிகளில் இந்த ராசியினர் தைரியமிக்கவர்கள் என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேஷம்

முதல் ராசியான மேஷம், பயமற்ற மற்றும் சாகச இயல்புக்கு பெயர் பெற்றது.

இந்த ராசியை உடையோர், மனதளவில் வலுவான மற்றும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பர். இவர்கள், சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்கின்றனர்.

அவர்களின் உறுதியும் தைரியமும் அசைக்க முடியாத வலிமையுடன் தடைகளை கடக்க முயற்சிப்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் அதை தீவிரமாக செய்து முடிப்பர். இவர்களுக்கு மன வலிமை அதிகமாக காணப்படும். அவர்களின் வெற்றிகள், அனுபவங்கள் மூலம் உருவாக்கப்படுகிறது.

பீனிக்ஸ் பறவை போல, விருச்சிக ராசிக்காரர்கள் தடைகளை கூட அவர்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக மாற்றுகின்றனர்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் நிலைத்தன்மையுடன் இருப்பார்கள். இவர்கள், ஒரு தனித்துவமான மன வலிமையை வெளிப்படுத்துகிறார்கள், அது அவர்களின் அசைக்க முடியாத உறுதியிலிருந்து உருவாகிறது.

ஒரு உறுதியான தூணைப் போல, எந்த ஒரு புயலையும் எதிர்கொள்வதில் தங்கள் உள்ளார்ந்த விடாமுயற்சியை நம்பி, அமைதியான நடத்தையுடன் அவர்கள் கஷ்டங்களைத் தாங்குகிறார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *