படிப்பில் இந்த ராசியினரை மிஞ்சுவதற்கு ஆளே இல்லையாம்… உங்க ராசியும் இருக்கானு பாருங்க
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நமது விதிகள் பெரும்பாலும் நம்முடைய பிறந்த ராசி மற்றும் நட்சத்திரங்களில் எழுதப்படுகின்றன.
பழங்கால நடைமுறையான ஜோதிடம், நமது அறிவுசார் திறன் உட்பட, நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்வதற்கு நீண்ட காலமாக வழிகாட்டியாக இருந்து வருகிறது.
அந்த வகையில் ஒருசிலர் என்னதான் முயற்சி செய்தாலும் கல்வியில் சிறந்த இடத்தை பெற முடியாத நிலை காணப்படும்.
அதே நேரம் சிலர் எப்படி இலகுவில் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள் என்று சிந்தித்திருக்கின்றீர்களா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய கல்வியில் அவர் பிறந்த ராசி பெரிதும் தாக்கம் செலுத்துகின்றது. அந்த வகையில் எந்த ராசியினர் கல்வியில் உயர்ந்த இடத்திற்கு செல்வார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியினர் கல்வி துறையில் தனித்துவமானவர்கள்.இயல்பிலேயே இவர்களுக்கு நுண்ணறிவு அதிகமாக இருக்கும்.
இவர்களின் பகுப்பாய்வு திறனும் நினைவாற்றலும் இவர்கள் கல்வியில் சிறந்து விளங்க காரணமாக அமைகின்றது.
மிதுனம்
மிதுன ராசியினர் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இயல்பியேயே அதிக நினைவாற்றல் கொண்டவர்கள்.
இவர்களிடம் கற்றல் ஆர்வம் அதிகமாக இருக்கும். இதனால் சிக்கலான கருத்துக்களை கூட விரைவாகப் புரிந்து கொள்ள உதவுகிறது.
இதனால் இவர்கள் மிகவும் எளிய வழியில் கல்வியில் உயர்நிலை அடைவார்கள். மகரம் இந்த ராசியினர் இயல்பிலேயே லட்சிய வாதிகளாக இருக்கின்றனர்.
மகரம்
இந்த ராசியினர் இயல்பிலேயே லட்சிய வாதிகளாக இருக்கின்றனர். இலக்கை அடைவதற்காக கடினமாக உழைக்கக்கூடிய இவர்கள் நினைத்ததை முடித்த பின்னரே ஆறுதல் அடைவார்கள்.
இயல்பிலேயே துண்ணறிவு மற்றும் நினைவாற்றல் அதிகமாக இருப்பதால் கல்வியில் சிறந்த இடத்தை பெற்றுக்கொள்வார்கள்.