கராத்தே மாஸ்டர் செய்த வேலைய பாருங்க..! கராத்தே கற்று கொடுப்பதாக கூறி +1 மாணவி பாலியல் பலாத்காரம்..!

கேரள ஊர்கடவு பகுதியைச் சேர்ந்தவர் சித்திக் அலி (43). கராத்தே பயிற்சியாளரான இவர், தனது வீட்டில் கராத்தே பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கராத்தே பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், இவரிடம் கராத்தே பயின்று வந்த அதே பகுதியை சேர்ந்த ப்ளஸ்-1 மாணவி நேற்று மாலை திடீரென மாயமானார். மாணவியை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அங்குள்ள ஆற்றில் மாணவியின் சடலம் மிதப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கராத்தே பயிற்சியாளர் சித்திக் அலி பலமுறை பலாத்காரம் செய்ததால் தான் மகளின் மரணம் நடந்ததாக பெற்றோர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து சித்திக் அலியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *