இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! அரிசி விலை ரூ.15/- முதல் ரூ.17/- வரை உயர்வு..!!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் மட்டுமல்லாது பால், வெங்காயம், பூண்டு, தக்காளி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் சற்று ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தமிழகத்தின் முக்கிய உணவுப் பொருளான அரிசியும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 06 மாத காலத்தில் மட்டுமே ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.15/- முதல் ரூ.17/- வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடும் பண நெருக்கடிக்கு அளக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த அரிசியின் விலை உயர்வுக்கு நீர்வரத்து சரிவர இல்லாததால் நெல் சாகுபடி குறைந்ததும், வெளிநாடுகளுக்கான அரிசி ஏற்றுமதி அதிகரித்ததுமே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இதற்கு முன் ரூ.2,000/- க்கு விற்ற ஒரு முட்டை அரிசியானது தற்போது ரூ.3,000/-க்கு விற்கப்படும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்நிலை சீராக இன்னும் ஒரு வருட காலம் ஆகும். எனவே அது வரை அரிசி விலை ஏற்றதுடனே காணப்படும் என விவசாயிகள் மற்றும் அரிசி வியாபாரா வட்டத்தினர் கூறுகிறார்கள். இது இல்லத்தரசிகளின் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.