மருத்துவர்கள் பரிந்துரை சீட்டில் கேப்பிட்டல் எழுத்தில் எழுத வேண்டும் எனது உண்மையா ? அமைச்சர் சொல்வதென்ன..!

டாக்டர்களின் கையெழுத்து பெரும்பாலும் படிக்க முடியாததாக உள்ளது. இதனால் பார்மசியில் மருந்துகளை பற்றிய விவரம் தெரியாதவர்கள் டாக்டர் கூறியுள்ள மருந்துகளுக்குப் பதிலாக வேறொன்றை மாற்றித் தரும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துச் சீட்டில் மருந்து, மாத்திரைகளின் பெயர்களை கேப்பிடல் லெட்டரில் எழுத வேண்டும் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கேப்பிட்டல் (Capital) எழுத்தில் மருத்துவ பரிந்துரை சீட்டில் எழுத வேண்டுமென பரவிய தகவல் குறித்து விளக்கமளித்த அவர், அவ்வாறு தேசிய மருத்துவ கவுன்சில் அறிக்கை வெளியிட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான அந்த அறிவிப்பு சாதாரண பொது அறிவிப்பு என்றும் தமிழக சுகாதாரத்துறை அது மாதிரியான அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் அவர் கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *