நெக்ஸா கார்களுக்கு ரூ.50,000 வரை சலுகைகளை வழங்கும் மாருதி சுசுகி… எந்தெந்த மாடல்களுக்கு? – முழு விவரம்!
புதிதாக மாருதி சுசுகி நிறுவனத்தின் காரை இந்த பிப்ரவரி மாதத்தில் வாங்க விரும்புகிறீர்களா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மாருதி சுசுகி தனது பிரபலமான ஹேட்ச்பேக், செடான் மற்றும் எஸ்யூவி மாடல்களுக்கு பல அற்புத தள்ளுபடிகளை வழங்குகிறது.
அந்த வகையில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனமானது தனது நெக்ஸா சேனல் மூலம் விற்கப்படும் கார்களுக்கு இந்த பிப்ரவரியில் ரூ.50,000 வரை சலுகைகளை வழங்குகிறது. இதில் கஸ்டமர் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் அல்லது ஸ்கிராப்பேஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் அடக்கம். பிப்ரவரி 2024-ல் மாருதி நெக்ஸா கார்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்து கீழே பார்க்கலாம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் Nexa போர்ட்ஃபோலியோவில் இக்னிஸ், பலேனோ, சியாஸ், ஃப்ரான்க்ஸ், ஜிம்னி, கிராண்ட் விட்டாரா, எக்ஸ்எல்6 மற்றும் இன்விக்டோ உள்ளிட்ட தயாரிப்புகள் அடங்கும். டீலர்கள் அளித்துள்ள தகவல்களின்படி, XL6 மற்றும் Invicto தவிர, அனைத்து நெக்ஸா மாடல்களுக்கும் இந்த மாதம் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பிப்ரவரி மாதத்தில் நெக்ஸா கார்களுக்கு மாடல் வாரியாக வழங்கப்படும் சலுகை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மாருதி சுசுகியின் இக்னிஸ் காருக்கு இந்த பிப்ரவரியில் அதிகபட்சமாக ரூ.44,000 வரையிலும், மாருதி சுசுகி பலேனோவிற்கு ரூ.37,000 வரையிலும், மாருதி சுசுகியின் சியாஸ் காருக்கு ரூ 28,000 வரையிலும், மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ் காருக்கு ரூ.40,000 வரையிலும், மாருதி சுசுகி ஜிம்னி காருக்கு ரூ.3000 வரையிலும், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா காருக்கு ரூ.50,000 வரையிலும் அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி இக்னிஸ் என்ட்ரி-லெவல் நெக்ஸா கார் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.84 லட்சம் முதல் ரூ.8.25 லட்சம் வரை செல்கிறது. அதே சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் பிரீமியம் ஹேட்ச்பேக்கான மாருதி சுசுகி பலேனோவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.66 லட்சம் முதல் ரூ.9.88 லட்சம் வரை செல்கிறது. மாருதி சுசுகியின் சியாஸ் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.40 லட்சம் முதல் ரூ.12.45 லட்சம் என்ற விலை வரம்பில் கிடைக்கிறது.
நிறுவனத்தின் Fronx காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.51 லட்சத்தில் தொடங்கி ரூ.13.03 லட்சம் வரை செல்கிறது. அதே சமயம் மாருதி சுசுகி ஜிம்னியின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.74 லட்சம் முதல் ரூ.14.95 லட்சம் வரையிலும் கிராண்ட் விட்டாராவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.80 லட்சம் முதல் ரூ.20.09 லட்சம் வரையிலும் இருக்கிறது.