இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான வார பலன் | பிப்ரவரி 26 முதல் மார்ச் 3

மேஷம்:

இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. நீங்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினைக்கு உங்கள் நெருங்கிய நண்பர் மூலமாக தீர்வு கிடைக்கலாம். பணி சார்ந்தும், வணிகம் சார்ந்தும் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பணி செய்யும் பெண்களுக்கு வீட்டிலும், வெளியிலும் மரியாதை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் – 11

அதிர்ஷ்ட நிறம் – கோல்டன்

ரிஷபம்:

உங்கள் உடல் நலனிலும், உறவுகளை தக்க வைப்பதிலும் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம் தொடர்புடைய எந்தவொரு பிரச்சினையையும் அலட்சியம் செய்ய வேண்டாம். உறவினர்களின் ஆதரவு நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்காது. வணிகத்தில் பிரச்சினைகள் வரக் கூடும்.

அதிர்ஷ்ட எண் – 3

அதிர்ஷ்ட நிறம் – மெரூன்

மிதுனம்:

உங்கள் பணி மற்றும் வணிகத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் காரணமாக இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இயலாத சூழல் ஏற்படும். பணப் பரிவர்த்தனைகளை செய்யும்போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண் – 9

அதிர்ஷ்ட நிறம் – வயலெட்

கடகம்:

இந்த வாரம் நீங்கள் மிகக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வணிகம் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்கள் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் பிரச்சினை வரும். வயிறு தொடர்புடைய பிரச்சினைகள் வர வாய்ப்பு உண்டு. ஆகவே உணவுக் கட்டுப்பாடு அவசியம்.

அதிர்ஷ்ட எண் – 4

அதிர்ஷ்ட நிறம் – சில்வர்

சிம்மம்:

இந்த வார தொடக்கத்தில் உடல்நிலை பாதிப்புகளை எதிர் கொள்வீர்கள். அதே சமயம், வணிகம் தொடர்புடைய விஷயங்கள் சிறப்பானதாக அமையும். நீண்டகாலமாக வேலை தேடி வரும் நபருக்கு இப்போது வெற்றி கிடைக்கும். அன்புக்குரிய நபர்கள் உடனான கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் – 5

அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு

கன்னி:

பணிகளில் நீங்கள் பிஸியாக இருப்பீர்கள். இதனால் உங்களுக்கு நெருக்கமான நபர்களுடன் நேரம் செலவழிக்க முடியாது. பணியிடத்தில் பணிச்சுமைகள் அதிகரிக்கும். வணிகம் மற்றும் சொத்து தொடர்புடைய பிரச்சினைகளுக்கு நீதிமன்றத்தை அணுகாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்.

அதிர்ஷ்ட எண் – 10

அதிர்ஷ்ட நிறம் – ப்ளூ

துலாம்:

இந்த வாரம் உங்களுக்கு சிறப்பு மிகுந்ததாக அமையும். பணி அல்லது வணிகம் தொடர்பாக வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும். நிலத்தை விற்க அல்லது வாங்க நீண்ட காலமாக முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். காதல் உறவுகள் பலமானதாக அமையும்.

அதிர்ஷ்ட எண் – 2

அதிர்ஷ்ட நிறம் – பச்சை

விருச்சிகம்:

வணிகம் தொடர்புடைய நடவடிக்கைகளை அவசர கதியில் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணியிடத்தில் உங்கள் எதிரிகள் குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப பிரச்சினைகள் காரணமாக மிகுந்த கவலை அடைவீர்கள். பணியிடத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

அதிர்ஷ்ட எண் – 15

அதிர்ஷ்ட நிறம் – கிரே

தனுசு:

இந்த வாரத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி மேலோங்கும். வணிகத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக பணியிடத்தை மாற்ற விரும்பும் நபர்களுக்கு அந்த முயற்சி கை கூடும். உறவினர்களிடம் இருந்து உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் – 7

அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்

மகரம்:

நீங்கள் திட்டமிட்ட பணிகளை சரியான தருணத்தில் நிறைவு செய்வீர்கள். இதனால் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். கடந்த காலங்களில் நீங்கள் மேற்கொண்ட கடின உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கான லாபம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண் – 6

அதிர்ஷ்ட நிறம் – பிங்க்

கும்பம்:

நீண்ட காலமாக உங்கள் வாழ்க்கையில் நிலவும் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட இருக்கிறது. வணிகம் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக அமையும். உங்களுக்கான மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட எண் – 10

அதிர்ஷ்ட நிறம் – கருப்பு

மீனம்:

அன்பு, பணம், வளர்ச்சி உள்பட அனைத்து விவகாரங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். வணிகத்தில் தடைபட்ட பணவரவு இப்போது வந்து சேரும். பெண் தோழியின் உதவியால் நீங்கள் விரும்பிய பணியிடம் கிடைக்கும். கூடுதல் வருமானத்திற்கான வாய்ப்புகள் பெருகும்.

அதிர்ஷ்ட எண் – 8

அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *