ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தத்தின் போது ராதிகாவை அம்பானி குடும்பத்தினர் எப்படி வரவேற்றனர் தெரியுமா?

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட் மகள் ராதிகா மெர்சென்டிற்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணத்துக்கு முந்தைய சடங்குகளில் இரண்டு குடும்பங்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் நிச்சயதார்த்தத்தின் போது ரிலையன்ஸ் குடும்பத்தினர் ராதிகா மெர்சென்ட்டை, எப்படி வரவேற்றனர் என்று தெரியுமா?. மந்திரங்கள் ஓத, இசைக்கருவிகள் முழங்க நடைபெற்ற அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் வருங்கால மருமகளை நீட்டா அம்பானி ஆரத்தி எடுத்து அன்புடன் வரவேற்றார். ராதிகாவை கட்டி அனைத்து வரவேற்ற நீட்டா அம்பானி, அவரை குடும்ப உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

நீட்டா அம்பானியை தொடர்ந்து, கணவர் முகேஷ் அம்பானி, இஷா அம்பானி, அவரது கணவர் ஆனந்த் பிராமல் மற்றும் உறவினர்கள் அனைவரும் ராதிகாவை கட்டி அனைத்து அன்புடன் வரவேற்றனர். உறவினர்களின் அன்பான வரவேற்பை தலைவணங்கி ஏற்றுக்கொண்டார் ராதிகா. இதனை தொடர்ந்து முகேஷ் அம்பானி மற்றும் வருங்கால கணவர் ஆனந்த் அம்பானி ஆகியோரின் கைகளை பிடித்துக்கொண்டு விழா மேடைக்கு சென்றார் ராதிகா.

ஜனவரி 19, 2023 ஆம் ஆண்டு கோல் தானா விழாவின் போது ஆனந்த் அம்பானியும், ராதிகாவும் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர். கோல் தானா என்பதற்கு பொருள் கொத்தமல்லி விதைகள் மற்றும் வெல்லம் ஆகும். அங்கு வந்த விருந்தினர்களுக்கு அவை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மணமகளின் பெற்றோர் இனிப்புகள் மற்றும் பரிசுகளுடன் மணமகன் வீட்டிற்கு வந்தனர். பின்னர் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

இவர்களது திருமணம் வரும் மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் சல்மான் கான், ஹாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *