குளிர் காலத்தில் தினமும் தயிர் சாப்பிடலாமா..? இதனால் உடல்நலனில் பாதிப்பு உண்டாகுமா..?
குளிர்காலம் என்றாலே நல்ல சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதற்கான ஒரு சீசனாக கருதப்படுகிறது. ஒவ்வொருவரும் குளிர்காலத்தில் தங்களுக்கு விருப்பமான பல்வேறு விதமான உணவுகளை சாப்பிட்டு மகிழ்கிறார்கள். ஆனால் நம் உடலுக்கு எந்த உணவுகள் ஒத்துக்கொள்ளும் மற்றும் எவை ஒத்துக் கொள்ளாது என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு உணவு சாப்பிடுவது அவசியம். பெரும்பாலான வீடுகளில் தினமும் தயிர் சாப்பிடுவதை ஒரு வழக்கமாக கொண்டிருப்பார்கள். இந்த ஆரோக்கியமான சூப்பர் ஃபுட்டில் அதிக அளவு கால்சியம், மெக்னீசியம், புரதச்சத்து மற்றும் பொட்டாசியம் காணப்படுகிறது.
வெப்பமான காலநிலையில் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுவதோடு, உடல் வெப்பநிலையை குறைத்து, உடல் எடையை குறைப்பதற்கு உதவும். எனினும், தயிரை குளிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையா இல்லையா என்பது குறித்த சில விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவது ஒரு தனி நபரின் உடலை பொறுத்து அது நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். குளிர் காலத்தில் காற்று குளிர்ந்து காணப்படுவதால் நமது உடலில் அழுத்தம் ஏற்படுகிறது, குறிப்பாக நமது செரிமான அமைப்பில் அழுத்தம் உண்டாகிறது. இதனால் வயிற்று வலி, வயிற்று உப்புசம், வீக்கம் மற்றும் பசியின்மை ஏற்படலாம். ஆகையால் தினமும் தயிர் சாப்பிடுவது நமது குடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.
தயிரில் காணப்படும் நல்ல பாக்டீரியாக்கள் குடலை ஆரோக்கியமான சமநிலையில் பராமரிக்கிறது. இது நமது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஒரு கூடுதல் ஆதரவாக அமைகிறது. குளிர்காலத்தில் இது குறிப்பாக முக்கியமானதாக கருதப்படுகிறது. தயிரில் உள்ள ப்ரோபயோடிக் செரிமானத்தை மேம்படுத்தி, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதனால் வயிற்று உப்புசம் அல்லது செரிமானமின்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து நாம் நிவாரணம் பெறலாம்.
அது மட்டுமல்லாமல் குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவது நம்மை நீரேற்றமாக வைப்பதற்கு உதவுகிறது. தயிரில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் இது நமது உடலுக்கு நீர்ச்சத்தை தருகிறது. குளிர் காலத்தில் பொதுவாக நாம் மிகக் குறைந்த அளவு தண்ணீரையே பருகுவோம். இந்த பிரச்சனையை போக்குவதற்கு தயிர் உதவுகிறது. உடலுக்கு போதுமான அளவு நீர்ச்சத்து கிடைப்பதால் வறட்சி தடுக்கப்பட்டு, நமது சருமம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு மேம்படுத்தப்படுகிறது.
எனவே குளிர்காலங்களில் தயிர் சாப்பிடுவது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும். எனினும் சுவாச கோளாறுகள் இருக்கக்கூடிய நபர்கள் மாலை 5 மணிக்கு பிறகு தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது சளியை உண்டாக்கி, அலர்ஜி மற்றும் ஆஸ்துமாவிற்கு வழி வகுக்கலாம்.
ஒருவேளை உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கும், ஆனால் தயிர் சாப்பிடுவதை உங்களால் விட முடியவில்லை என்றால் உங்களது உணவில் வெதுவெதுப்பான உணவுகளை சேர்த்து உங்கள் டயட்டை பேலன்ஸ்டாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தயிர் நமது உடலில் குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்துகிறது. இது வெப்பமான மாதங்களில் பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில் குளிர் காலத்தில் குறைவான தாக்கத்தை கொண்டிருக்கும்.
அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக இருக்கிறது. இவர்கள் வழக்கமான முறையில் தயிர் சாப்பிட்டு வரும்பொழுது ரத்த அழுத்தம் குறைகிறது.