இந்திய சந்தையில் புதிய EV கார்.. 2024க்காக பலே பிளான் போடும் Porsche – விலை மற்றும் ஸ்பெக் விவரங்கள் இதோ!
போர்ஷே நிறுவனம் தனது Macan EVயை உலகளாவிய சந்தையில் வருகின்ற 2024ம் ஆண்டில் நடுப்பகுதியில் வெளியிடவுள்ளது. இந்தியாவிலும் அறிமுகமாக உள்ள இந்த எலக்ட்ரிக் கார் (SUV) இரண்டு மோட்டார்களை கொண்டு, (ஒவ்வொரு அச்சிலும் ஒன்று) 612hp மற்றும் 1,000Nm சக்தியை உற்பத்தி செய்யும். மேலும் இந்த கார் 100kWh பேட்டரி பேக்கைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Macan EVயை 270kW வரை சார்ஜ் செய்ய முடியும் என்று Porsch கூறுகிறது, அதாவது 22 நிமிடங்களில் இதன் பேட்டரி 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விலை 1 முதல் 1.5 கோடி வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
புதிய V8 கொண்டு இயங்கும் Panamera GTS, இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3rd ஜென் Panamera இந்தியாவில் கடந்த நவம்பர் 2023ல் 2.9-லிட்டர் ட்வின்-டர்போ V6 இன்ஜினுடன் அறிமுகப்படுத்தப்பட்டாலும்,Porsche அதன் போர்ட்ஃபோலியோவில் 4.0-லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜினுடன் உயர் செயல்திறன் கொண்ட GTS மடலை இப்பொது இணைக்கவுள்ளது.
Mercedes-AMG GT63 S e-என் செயல்திறனுக்கு சவால் விடும் ஒரு வண்டியாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 2 கோடி ரூபாய்க்கு இந்த வாகனம் விற்பனையாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.