ஆப்பிள் முதல் பைஜூஸ் வரை புறக்கணிக்கப்பட்ட திறமையான சிஇஓக்கள்

பிரபல எட்டெக் நிறுவனமான பைஜூஸ்-ன் முக்கிய முதலீட்டாளர்களான புரோசஸ் என்பி, பீக் எக்ஸ்வி பார்ட்னர்ஸ் ஆகியவை சேர்ந்து பைஜூஸ் நிறுவனர் பைஜூ ரவீந்திரனை கம்பெனியின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக்குவதற்காக வாக்கெடுப்பு நடத்தின.

ஒரு காலத்தில் ஆன்லைன் கல்விப் சேவையில் கொடிகட்டிப் பறந்த பைஜூஸ் நிறுவனத்தை கட்டுப்படுத்துவதற்காக நடக்கும் போட்டியில் இந்த நடவடிக்கையை மேற்கண்ட நிறுவனங்கள் செயல்படுத்தி உள்ளன. தன்னை பதவி நீக்கும் தீர்மானங்களை பைஜூ ரவிந்திரன் உடனடியாக நிராகரித்தார்.

2015 இல் அவர் நிறுவிய பைஜூஸ் நிறுவனத்தின் குழுவில் இருந்து அவரை நீக்குவதற்காக இந்த தீரமானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதற்குக் காரணம் நிறுவனர் பைஜூ ரவீந்திரனின் தலைமை மற்றும் நிறுவனத்தின் போக்கு பெரும்பான்மை பங்குதாரர்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.

இதே சூழ்நிலை பல திறமையான சிஇஓக்களுக்கு வந்துள்ளது.

OpenAI நிறுவனம்: பைஜூஸ் ரவீந்திரனுக்கு நிகழ்ந்ததைப் போலவே OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் நவம்பர் 18 ஆம் தேதியன்று அந்த நிறுவனத்தின் வாரியத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது தலைமையின் மீதான நம்பிக்கையை நிர்வாகம் இழந்தது.

பின்னர் பல சமாதான முயற்சிகள் செய்யப்பட்டு நவம்பர் 21 ஆம் தேதி முதல் மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆல்ட்மேன் திரும்புவது குறித்து முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் விளைவாக ஒரு புதிய வாரியம் நியமிக்கப்பட்டது.

Apple: இதேபோல் 1985 ஆம் ஆண்டில், ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது நிறுவன வாரியத்துடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக விலகினார்.

1997 இல் ஆப்பிள் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி லாபத்தைக் காட்டி அட்டகாசமாகத் திரும்பவும் நிறுவனத்துக்குள் ஸ்டீவ் ஜாப்ஸ் வந்தார்.

Twitter: 2008 ஆம் ஆண்டில், ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் 2015 ஆம் ஆண்டில் மீண்டும் வந்த ஜாக் டோர்சி 2021 இல் பராக் அகர்வாலுக்கு தனது பதவியை அளிக்கும்வரை அடுத்த ஆறாண்டுகளுக்கு ட்விட்டர் நிறுவனத்தின் பொறுப்பை வகித்தார்.

ஆப்பிள், ஓபன் ஏஐ, ட்விட்டர் போன்ற நிறுவனங்களின் சிஇஓக்கள் பதவியிலிருந்து தூக்கப்பட்டாலும் மீண்டும் அதே பதவியைக் கைப்பற்றி தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தினர். ஆனால் அப்படியொரு நிலைமை பைஜூஸ் சிஇஓவான பைஜூ ரவீந்திரனுக்கு இல்லை என்பது துரதிர்ஷ்டவசமான நிலையாகும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *