நடிகர் அஜித்தின் தாய் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.. அஜித் அண்ணன் வெளியிட்ட புகைப்படம்
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள ஏகே 63 படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்பது போல் கூறப்படுகிறது.
சுப்பிரமணியம் – மோஹினி தம்பதிக்கு 1971ஆம் ஆண்டு பிறந்தவர் தான் அஜித். இவருடைய தந்தை கடந்த ஆண்டு, வயது மூப்பு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் காலமானார். அஜித்துக்கு ஒரு அண்ணன் மற்றும் ஒரு தம்பி உள்ளனர். இதில் அஜித்தின் அண்ணன் அணில் குமார் தொழிலதிபர் ஆவார்.
அஜித்தின் தாய்
இந்நிலையில், அணில் குமார் தனது தாய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித்தின் தாய் மோஹினி அவர்களின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.