3 நாட்கள் வரை நிலைத்து நிற்கும் பேட்டரி… புதிய ஹானர் X9b போனின் விலை இவ்வளவு தானா?
ஸ்மார்ட்போன்களை வாங்க மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டை கருத்தில் கொண்டிருக்கும் யூஸர்களை இலக்காக கொண்டு HTech நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் புதிதாக Honor X9b என்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த சமீபத்திய X-சீரிஸ் மொபைலானது 8GB ரேம் உடன் இணைக்கப்பட்ட 4nm ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்டுகிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த மொபைலின் பேட்டரி லைஃப் 3 நாட்கள் வரை நீடிக்கும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இந்தியாவில் Honor X9b மொபைலின் விலை:
இந்த புதிய மொபைலின் 8GB ரேம் +256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட் இந்தியாவில் ரூ.25,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பேங்க் ஆஃபர்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் இதனை ரூ.22,999 என சலுகை விலையில் வாங்கலாம். HTech நிறுவனம் கடந்த பிப்ரவரி 16 முதல் இந்தியாவில் இந்த மொபைலை விற்க துவங்கி இருக்கிறது. இந்த மொபைல் மிட்நைட் பிளாக் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு என 2 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. Honor X9b மொபைலானது அமேசான் மற்றும் நாடு முழுவதும் சுமார் 1,800 ரீடெயில் ஸ்டோர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
Honor X9b மொபைலின் சிறப்பம்சங்கள் :
புதிதாக அறிமுகமாகி இருக்கும் Honor X9b மொபைலில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிடத்தகுந்த பெரிய அம்சம் என்னவென்றால் அதன் ஸ்கிரீனிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் டிஸ்ப்ளே டெக்னலாஜி தான். இதிலிருக்கும் அல்ட்ரா பவுன்ஸ் ஆன்டி-டிராப் டிஸ்ப்ளே டெக்னலாஜியானது 1.5 மீட்டர் உயரம் வரையிலான டிராப்-ரெசிஸ்டன்ட்டை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. மார்பிள் போன்ற கடினமான சர்ஃபேஸ்களில் மொபைலை நீங்கள் தவறி விட்டாலும் 360 டிகிரி பாதுகாப்பு கிடைக்கும். மேலும் Honor X9b மொபைலானது IP53 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ் ரேட்டிங்கை கொண்டுள்ளது. இந்த மொபைல் 120Hz ரெஃப்ரஷ் ரேட் & 1.5K ரெசல்யூஷன் கொண்ட 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
இது 8GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் Snapdragon 6 Gen 1 ப்ராசஸரை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான மேஜிக் ஓஎஸ் 7.2-ல் இது இயங்கும். மேலும் இந்த மொபைலுக்கான ஆண்ட்ராய்டு 14 அப்டேட் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய X9b மொபைலில் 108MP சென்சார், 5MP வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் அடங்கிய 3 ரியர் கேமரா செட்டப் உள்ளது. மொபைலின் முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ கால்ஸ்ளுக்காக 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த மொபைலில் 35W சார்ஜிங் ஸ்பீடை சப்போர்ட் செய்யும் 5800mAh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 185 கிராம் ஆகும்.