உலகிலேயே மிகச்சிறிய Washing Machine.., துணி போட்டு சலவை செய்து Guinness சாதனை

உலகிலேயே மிகச்சிறிய சலவை இயந்திரம் (Washing Machine) ஒன்றை உருவாக்கியவர், Guinness World Record படைத்துள்ளார்.

கின்னஸ் சாதனை
இந்திய மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்தவர் சாய் திருமலாநீதி. இவர், உலகிலேயே மிகச்சிறிய சலவை இயந்திரத்தை (Washing Machine) உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், Washing Machine-யை சாய் திருமலாநீதி உருவாக்கும் செயல்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சுவிட்ச் மற்றும் ஒரு சிறிய பைப் உள்ளிட்ட சிறிய பாகங்களை நுணுக்கமாக முறையில் பயன்படுத்தி ஒருங்கிணைக்கிறார்.

பின்னர், முழுமையாக அந்த சிறிய சலவை இயந்திரம் செயல்பட தொடங்குகிறது. பின்னர், அந்த இயந்திரத்தில் தண்ணீரை ஊற்றி பவுடரை போட்டு சிறிய துணி ஒன்றையும் போடுகிறார். சிறிது நேரத்தில் அந்த துணியை வெளியே எடுத்தபோது அது சுத்தமாக காட்சி அளிக்கிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதனை பார்த்த பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *