காங்கிரஸில் இருந்து விலகும் அடுத்த தலை?. என்னப்பா இது, காங்கிரசுக்கு வந்த சோதனை.!!!
கன்னியாகுமரி எம்பி சீட்டு வழங்கப்படாமல் இருந்ததில் கடந்த சில தினங்களாகவே அதிருப்தியில் இருந்தார் விஜயதரணி.
இதனைத் தொடர்ந்து நேற்று அவர் பாஜகவில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து மற்றொரு காங்கிரஸ் எம் பி யும் கட்சியிலிருந்து விலகுவார் என தகவல் வெளியாகி உள்ளது. விலகிய பின்னர் அவர் பாஜகவில் அல்லது அதிமுகவில் இணைவார் என கூறப்படுகிறது.
அது வேறு யாருமில்லை திருச்சி எம்பி திருநாவுக்கரசர் தான். கடந்த முறை திருச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவருக்கு இந்த முறை சீட் தரக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பியுள்ளனர். இதனால் சீட் கிடைக்காத என உறுதியானதால் அவர் கட்சியில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.