பாஜவுக்கு எதிராக புதிய இயக்கம்.!! செல்வப் பெருந்தகை அதிரடி.!!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “இந்தியாவிலேயே பாஜக காலூன்ற முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு.
இங்கே திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுக்கோப்பாக வலிமையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
பாஜக ஆட்சிக்கு எதிராக மாபெரும் பரப்புரை இயக்கத்தை மார்ச் முதல் வாரத்தில் காங்கிரஸ் இயக்கம் தமிழக முழுவதும் நடத்த இருக்கிறது இதன் மூலம் கடந்த 10 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் மோடி ஆட்சியின் அவலங்களை காங்கிரஸ் கட்சியினர் கிராமம் கிராமமாக வீடு வீடாக கையில் காங்கிரஸ் கொடி ஏந்தி துண்டு பிரசுரங்களை விநியோகித்து தீவிரமான பரப்புரை இயக்கத்தை மேற்கொள்வார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.