திமுக மீது வைகோ அதிருப்தி.! கூட்டணி முறிவு!? திடீர் ஆலோசனை.!!
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
அந்த வகையில் நேற்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நவாஸ் கனி ராமநாதபுர தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கும் வகித்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு அதிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மதிமுகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்க முடியாது, ஒரு சீட் தான் ஒதுக்க முடியும் என திமுக கூறுவதால், வைகோ அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் வைகோ ஆலோசனை நடத்த உள்ளார். இதன் மூலம் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக அங்கம் வகிக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.