திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதா? கேள்வி எழுப்பும் அதிமுக தரப்பு.!!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாள் விழா நேற்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்ட நிலையில் அதனை வெற்றி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
பொதுக்கூட்ட மேடையில் பேசிய ராஜேந்திர பாலாஜி “இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் 30% வாக்குகளை வாங்கிய திமுக அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதா?
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்னையை தீர்க்க முடியாத திமுக எப்படி மக்கள் பிரச்னையை தீர்க்கப் போகிறது” என கேள்வி எழுப்பி உள்ளார்.