Director Meera mahadhi: இளம் ஹீரோக்களே கதை கேட்க தயாராக இல்லை.. வருத்தத்தை வெளிப்படுத்திய இயக்குநர்

டபுள் டக்கர் என்ற உற்சாகமான தலைப்புடன் களமிறங்க உள்ளது இயக்குநர் மீரா மஹதியின் அறிமுகப்படம்.

 

இந்த படத்தில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கருணாகரன், கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஏர் ஃபிள்க் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடந்து முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் முன்னெடுத்துள்ளனர். முன்னதாக இந்த படத்தில் டீசர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அனிமேஷன் கேரக்டர்களை முன்னிலைப்படுத்தி இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மீரா மஹதி. இவர் குறும்படங்களை இயக்கி அதன் அனுபவத்தில் தற்போது டபுள் டக்கர் படத்தை இயக்கியுள்ளார். எந்த முன்னணி இயக்குனரிடமும் இவர் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இந்தப் படத்தின் இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் படத்தின் கதையை தான் இளம் நடிகர்களுக்கு கூற முற்பட்டபோது ஒரு சாதாரண மனிதனுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதையை கூட தனக்கு அவர்கள் கொடுக்கவில்லை என்று அவர் தனது வருத்தத்தை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *