ஜாலியான காதல் படம் கேட்டோம், ஆக்ஷன் படம் கொடுத்தார்” – வருண்
வருண்கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் படம் ‘ஜோசுவா இமை போல காக்க’.வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் வருண் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படம் மார்ச் 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார்.கிருஷ்ணா, யோகி பாபு, மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.செய்தியாளர் சந்திப்பில் வருண், “இந்தப் படத்தில் எனக்கு ஒரு சிறந்த அனுபவம் கிடைத்தது.
என்னை சிறந்த நடிகராக்கிய இயக்குனர் கவுதம் சாருக்கு நன்றி.அவங்க ஸ்டைலில் ஜாலியான காதல் படம் கேட்டோம்.ஆனால் அவர் கொடுத்தது ஆக்ஷன் படம்.
யானிக் பென் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.படம் சீரியஸாக இருக்கும்.டிடி, கிருஷ்ணா போன்ற ஜாலியான மனிதர்களுடன் நடித்துள்ளேன்,” என்றார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறும்போது, “வருண் என் சகோதரியின் மகன்.நான் தயாரிக்கும் படங்களில் கவுரவ வேடத்தில் நடித்து வந்தார்.அவரை இயக்குனர் கவுதமிடம் அறிமுகப்படுத்தினேன்.அதை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியிருக்கிறார்.