அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை – சசிகலாவை சந்தித்தார் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் இன்று சசிகலாவை அவரது புதிய இல்லத்தில் நேரில் சந்தித்தார்.ஜெயலலிதா இடத்தை நிரப்புவது யார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் பற்றி பேச விரும்பவில்லை.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தின் எதிரே வி.கே.சசிகலா புதிய வீடு கட்டியுள்ளார்.
இந்த பங்களாவுக்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடந்தது.இதில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (பிப்ரவரி 24) சசிகலா வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது கோவில் போன்றது.இந்த வீடு அவர்களுக்குப் பெயரும், புகழும், மகிழ்ச்சியும் தர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.
அவரிடம் நிருபர்கள், ‘ஜெயலலிதாவின் ஆளுமையை தமிழகத்தில் யார் நிரப்புவார்கள் என்று நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை என முடித்துக்கொண்டார் ரஜினி.“