அனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் ஏகப்பட்ட டிரஸ் கோட் ..? அடேங்கப்பா..?!

அம்பானி குடும்பமே கோலாகலமாக உள்ளது. மும்பையில் உள்ள அவர்களது இல்லமான அன்டிலியா வண்ண வண்ண விளக்குச் சரங்களால் ஜொலிக்கிறது. காரணம் முகேஷ் அம்பானி மகன் அனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்டின் திருமண முன்வைபவங்கள்தான்.

அனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்கு திருமண முன்சடங்குகள் ஏகப்பட்ட ஆரவாரத்துடன் தடபுடலாக நடைபெற்று வருகிறது. அம்பானி, ராதிகா குடும்பத்தில் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது.

அம்பானி குடும்பத்தின் ஆடம்பரத்துக்கு எல்லையே இல்லாத ஜாம்நகரின் செழுமையான அமைப்புக்கு மத்தியில், விருந்தினர்கள் எல்லாரும் மூன்று நாள் கொண்டாட்டத்துக்குத் தயாராகி வருகின்றனர்.

அரச குடும்ப நேர்த்தியுடன் அலங்காரமான அழைப்பிதழ், அன்பான வரவேற்பை மட்டுமல்லாமல், ஒவ்வொரு விருந்தாளிகளும் குதூகலமாக தயாராகி வருகின்றனர். இந்த வைபவங்களுக்கு எனத் தனித்துவமான டிரஸ் கோட்-ஐ ஆனந்தும் ராதிகாவும் வகுத்துள்ளனர்.

விழாக்களில் முதல் நாள், ‘An Evening in Everland,’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அப்போது விருந்தாளிகள் இந்த கொண்டாட்டத்துக்குள் நுழையும்போது, அவர்களுக்கு சிறந்த மாலைநேர பார்ட்டிவேர் ஆடையுடன் வருவர்.

அடுத்த நாள், ‘A Walk on the Wildside’ என்ற தீமில் உள்ளது. அன்றைய தினத்துக்கான ஆடைகள் வனங்கள் சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளன. அம்பானிகளின் விலங்குகள் மீட்பு மையத்தின் வழியாக விருந்தினர்கள் பயணிக்கும்போது, அவர்கள் அணிந்திருக்கும் ஆடையானது இயற்கையை பிரதிபலிப்பதாக இருக்கும்.

மூன்றாவது நாள் விழாவில் விருந்தினர்களை ‘Tusker Trails’ மூலம் ஜாம்நகரின் அமைதியான அழகில் திளைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது பசுமையான சுற்றுப்புறங்களுக்கு ஏற்ற புதுப்பாணியான உடைகளை விருந்தினர்கள் அணிந்திருப்பர்.

இறுதியாக, ‘Hashtakshar’ பாரம்பரிய இந்திய ஆடைகளுடன் கொண்டாட்டங்கள் விமரிசையாக நிறைவு பெறுகிறது. விருந்தினர்கள் தங்கள் நேர்த்தியான உடையுடன் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும்போது, அவர்கள் அனந்த் மற்றும் ராதிகாவின் சங்கமத்தின் மகத்தான சரித்திரத்தில் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச் செல்வார்கள்.

ஆடைகளுக்கு அப்பால், சிகையலங்கார நிபுணர்கள், புடவை-டிரேப்பர்கள் முதல் மேக்கப் ஆர்டிஸ்ட்கள் விருந்தினர்களை பொலிவான தோற்றத்தில் தோன்றச் செய்வர். பிரபலங்களின் நிகழ்ச்சிகள் இந்த விழாவை சிறப்பிக்க உள்ளன. இது அனந்த் அம்பானியும் ராதிகா மெர்ச்சன்டும் தங்கள் வாழ்நாள் முழுவதும் போற்றி நினைவுகூரும் நிகழ்வாக நிச்சயம் அமையும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *