ஈஷா அம்பானி போடும் தனி கணக்கு.. ரிலையன்ஸ் ரீடைல் கீழ் எத்தனை பிராண்டுகள் இருக்கு தெரியுமா..?
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்காக பல வாரிசு திட்டங்களை வைத்துள்ளார். முகேஷ் அம்பானி தனது மகள் இஷா அம்பானியிடம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மிகவும் லாபகரமான துணை நிறுவனங்களில் ஒன்றை ஒப்படைத்துள்ளார்.
தற்போது, இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்லின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இது 45 க்கும் மேற்பட்ட வணிகங்கள் மற்றும் பிரிவுகளைக் கொண்ட ஒரு கூட்டு நிறுவனமாகும்.
அவற்றில் பிரபலமானவை ஜியோ ஸ்டோர்ஸ், ரிலையன்ஸ் ஃப்ரெஷ், ஜியோமார்ட், அர்பன் லேடர், ஜிவாமே மற்றும் ஜஸ்ட்டயல் ஆகியவை அடங்கும். இந்திய ரீடைல் துறையை கட்டியாள துடிக்கும் ஈஷா அம்பானி கையில் இருக்கும் பிரபலமான பிராண்டுகளை விரிவாகப் பார்க்கலாம்.
ஹாம்லேஸ்- Hamleys: 2019 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ரீடெய்ல் ரூ.620 கோடியை ரொக்கமாகத் தந்து பிரிட்டிஷ் பொம்மை நிறுவனமான ஹாலேஸ்ஸை வாங்கியது. உலகின் மிகப் பழமையான பொம்மை விற்பனையாளரான ஹாம்லேஸ் 1760 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது ஆகும்.
அஜியோ- AJIO: அஜியோவுடன் 2016 ஆம் ஆண்டில் இ-காமர்ஸ் வணிகத்தை ரிலையன்ஸ் ரீடெய்ல் செய்யத் தொடங்கியது.
இந்தத் தயாரிப்பு வெகு சீக்கிரமே பெரும் வரவேற்பை இந்திய மார்க்கெட்டில் பெற்றது. இந்த ஆன்லைன் ஸ்டோரில் ஏராளமான ஆடைகள் கலெக்ஷன், ஆக்சஸரீஸ், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபல பிராண்டு ஷுக்கள் விற்கப்படுகின்றன.
நெட்மெட்ஸ்- Netmeds: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், விட்டலிக் மற்றும் அதன் துணை நிறுவனங்களுடனான ரூ.620 கோடி ஒப்பந்தத்தின் மூலம் நெட்மெட்ஸின் பெரும்பகுதி பங்குகளை வாங்கியது. அதன் வாயிலாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இப்போது ஆன்லைன் மருந்தகத்தின் 60% உரிமையைக் கொண்டுள்ளது.
டிரா பியூட்டி- Tira Beauty: ரிலையன்ஸ் ரீடெய்லின் கீழ் உள்ள புதிய வணிக நிறுவனம் இந்த டிரா பியூட்டி. டிரா பியூட்டி ஏப்ரல் 2023 இல் தொடங்கப்பட்ட ஒரு ஆம்னிச்சனல் அழகு விற்பனையாளர். மும்பையின் பிகேசி பகுதியில் உள்ள ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் தொடங்கப்பட்ட புதிய ஸ்டோருடன், இஷா அம்பானியால் நிறுவப்பட்ட புதிய அழகு பிராண்ட் டிரா ஆகும்.
மார்க்ஸ் அண்டு ஸ்பென்சர்- Marks & Spencer: 2001இல் மார்க்ஸ் அண்டு ஸ்பென்சர் இந்தியாவில் நுழைந்தது. அதன் தாய் பிராண்டான மார்க்ஸ் அண்டு ஸ்பென்சரில் 51% பங்குடன் அந்த கம்பெனி ரிலையன்ஸ் ரீடெய்லுடன் மார்க்ஸ் அண்டு ஸ்பென்ஸர் ரிலையன்ஸ் இந்தியா என்ற கூட்டுநிறுவனம் 2008 ஏப்ரலில் உருவாக்கப்பட்டது.
கவர் ஸ்டோரி- Cover Story: இந்தியாவின் முன்னோடி ஃபேஷன் பிராண்டாகக் கருதப்படும் கவர் ஸ்டோரி, இந்தியாவில் சர்வதேச ஆடைகளை அறிமுகப்படுத்தியது. கவர் ஸ்டோரி, ஈஷா அம்பானியின் கீழ் உள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல் பிரிவாகும். லண்டனில் ஒரு டிசைன் ஸ்டுடியோவைக் கொண்டுள்ளது.
ஃப்ரஷ்பிக்- Freshpik: 2021 இல், இந்த ஃப்ரஷ்பிக் கோர்மெட் பிராண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மும்பையின் பிகேசி பகுதியில் உள்ள முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவில் மட்டும் அதன் கிளை அமைந்துள்ளது.
7 லெவன்- 7Eleven: உலகின் சிறந்த கன்வீனியன்ஸ் ஸ்டோராகக் கருதப்படும் 7-லெவன் 24/7 நேரமும் திறந்திருக்கும். டல்லாஸில் அமைந்துள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் 7-லெவன், இந்தியாவில் ரிலையன்ஸ் சில்லறை விற்பனை நிலையங்களைத் திறக்க 2021 இல் இணைந்தன. முதல் கடை மும்பையில் திறக்கப்பட்டது.
க்ளோவியா- Clovia: 2022 ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் ரீடெய்ல் பர்பிள் பாண்டா ஃபேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பெரும்பாலான பங்குகளை வாங்கியது, ஆன்லைன் உள்ளாடை நிறுவனமான க்ளோவியாவை வாங்கியது.
யூஸ்டா- Yousta: 2023 ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் ரீடெய்ல் அதன் ஃபேஷன் ரீடெய்ல் வடிவமான யூஸ்டாவை அறிமுகப்படுத்தியது. யூஸ்டா நவீன தொழில்நுட்பத்துடன் செயல்படும் சில்லறை தளவமைப்புகளுடன் இளம் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் ஃபேஷனை வழங்குகிறது.
ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ்- Reliance Trends: ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் இஷா அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்லைச் சேர்ந்த ஒரு பிரிவு ஆகும்.