ஜீ மெயிலுக்கு பதிலாக எக்ஸ் மெயில் – கூகுளிற்கு அதிர்ச்சி கொடுத்த மஸ்க்
கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் வசதியை எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பானது கூகுள் நிறுவனத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்னஞ்சல் சேவை
எக்ஸ் நிறுவனத்தின் செக்யூரிட்டி இன்ஜினியர் குழுவில் பணியாற்றி வரும் நாதன் மெக்ராடி, எக்ஸ்-மெயிலை எப்போது அறிமுகம் செய்யப் போகிறோம் என ட்வீட் செய்திருந்தார்.
‘Its Coming’ என அதன் வரவு குறித்து மஸ்க், பதில் ட்வீட் செய்துள்ளார். இதன்மூலம் எக்ஸ்-மெயில் எனும் இ-மெயில் சேவை குறித்த சூசக தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த விடயம் இப்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.